வாட்ஸ்அப் மெசேஜ்களை அரசு பார்ப்பதாக வதந்தி: பிஐபி விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: வாட்ஸ்அப் தளத்தில் வதந்தி மெசேஜ்களுக்கு பஞ்சமே இருக்காது. அந்த வகையில் வாட்ஸ்அப் தளத்தில் மெசேஜ்களை இந்திய அரசு பார்ப்பதாக சொல்லி வதந்தி மெசேஜ் ஒன்று வலம் வந்தது. அதை மேற்கோள் காட்டி மறுப்பு தெரிவித்துள்ளது, மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB).

வாட்ஸ்அப் மெசேஜ்களை ‘டிக் மார்க் தொடர்பான வாட்ஸ்அப் தகவல்’ என இந்த மெசேஜ் வலம் வந்துள்ளது. அதில் பயனர்கள் அனுப்பிய மெசேஜுக்கு பக்கத்தில் அந்த மெசேஜ் அனுப்பப்பட்ட ஸ்டேட்டஸ் குறித்த தகவலை டிக் மார்க் மூலம் அறிந்து கொள்ளலாம்.

ஒரு டிக் இருந்தால் மெசேஜ் அனுப்பட்டுள்ளது, இரண்டு டிக் இருந்தால் மெசேஜ் டெலிவரி ஆகியுள்ளது, இரண்டு ப்ளூ டிக் இருந்தால் மெசேஜ் பார்க்கப்பட்டுவிட்டது. மூன்று ப்ளூ டிக் இருந்தார் சம்பந்தப்பட்ட மெசேஜை அரசு பார்த்துள்ளது. இரண்டு ப்ளூ மற்றும் ஒரு ரெட் டிக் இருந்தால் பயனர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்றும், ஒரு ப்ளூ மற்றும் இரண்டு ரெட் டிக் இருந்தால் பயனரின் தரவுகளை அரசு ஆராய்கிறது என்றும், மூன்று ரெட் டிக் இருந்தால் பயனருக்கு அரசு சம்மன் அனுப்பலாம் என்றும் அதில் சொல்லப்பட்டது.

அது குறித்து ஆய்வு செய்த பிஐபி ஃபேக்ட் செக்கிங் குழு, ‘அந்தத் தகவல் முற்றிலும் தவறானது மற்றும் போலியானது. வாட்ஸ்அப் அல்லது இதர சமூக வலைதளங்களில் பயனரின் செயல்பாட்டை அரசு கண்காணிக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளது. அதோடு வாட்ஸ்அப்பில் ரெட் டிக் மெசேஜ் ஸ்டேட்டஸ் என்பது இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

இப்போதைக்கு சாம்பல் மற்றும் ப்ளூ டிக் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் தலம் எண்டு-டு-எண்டு என்கிரிப்ஷனில் இயங்குகிறது. அதனால் மெசேஜை அனுப்பும் பயனரும், அதை பெறுகின்ற பயனர்களும் மட்டுமே அதை பார்க்கவும், அக்சஸ் செய்யவும் முடியும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE