சான்பிரான்சிஸ்கோ: ட்விட்டரின் ட்வீட்டெக் (TweetDeck) சேவையை இனி சரிபார்க்கப்பட்ட (வெரிஃபைடு) கணக்கு உள்ள பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். அதன்பின் தொடர்ச்சியாக பல அதிரடி மாற்றங்களை அவர் கொண்டுவந்த வண்ணம் இருக்கிறார். மாஸ் லேஆஃப் ஆரம்பித்து ப்ளூ டிக் கட்டண முறை வரை பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். தற்போது ட்விட்டர் பயன்படுத்துவோருக்கு பலவித கட்டுப்பாடுகளையும் அவர் அறிவித்துள்ளார்.
அண்மையில், ட்விட்டரில் கணக்கு வைத்துள்ள ஒருவர் நாள் ஒன்றுக்கு எத்தனை ட்வீட்களை பார்க்க முடியும் என்பதற்கு ட்விட்டர் நிறுவனம் வரம்பு நிர்ணயித்தது. தற்போது அடுத்த அதிரடி நடவடிக்கையாக ட்விட்டர் நிறுவனம் இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி இனி ட்வீட்டெக் சேவையை வெரிஃபைடு ட்விட்டர் கணக்கு உள்ள பயனர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். ட்வீட்டெக் பயன்படுத்த விரும்பும் பயனர்கள் இன்னும் 30 நாட்களுக்குள் தங்களின் கணக்குகளை வெரிஃபைடு கணக்குகளாக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை ஒரு ட்வீட் வாயிலாக அறிவித்துள்ள ட்விட்டர் நிறுவனம் ட்வீட்டெக் சேவையில் மேலும் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் இணைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
» மோட்டோரோலா ரேசர் 40, ரேசர் 40 அல்ட்ரா போன்கள் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்
» 2G to 4G | ரூ.999-க்கு ரிலையன்ஸ் ஜியோவின் ‘ஜியோ பாரத்’ போன் அறிமுகம்: சிறப்பு அம்சம் என்ன?
அதேவேளையில் ட்விட்டர் நிறுவனம் பழைய, புதிய வெர்சன் ட்வீட்டெக் என எதைப் பயன்படுத்தினாலும் கட்டணம் வசூலிக்குமா இல்லை புதிய மேம்படுத்தப்பட்ட ட்வீட் டெக் வெர்சனுக்கு மட்டுமே கட்டணமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. இது தொடர்பாக பயனர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு ட்விட்டர் நிறுவனம் இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.
ட்வீட்டெக் சேவையை தொழில்நிறுவனங்களும், ஊடகங்களும் அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றன. ஊடக நிறுவனங்கள் தங்கள் செய்திகளின் போக்கை, அவற்றுக்கான வரவேற்பை அறிந்துகொள்ளவும், வாசகர்களின் தெரிவுகளை அறிந்து கொள்ளவும் நல்ல ஆய்வுக்களமாக இருக்கின்றது. தங்களுக்கான சந்தை வரவேற்பை அறிந்துகொள்ள ட்வீட்டெக்கை ஒருசில பிரபலங்களும் பயன்படுத்துகின்றனர். இது ட்விட்டர் நிறுவனத்துக்கு வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது. குறிப்பாக எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின்னர் விளம்பர வருவாயைப் பெருக்க திணறும் சூழலில் ட்வீட்டெக் வருவாய்க்கு உதவுகிறது. இருப்பினும் ட்விட்டர் நிறுவனம் ட்வீட்டெக் பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்து பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதுவும், ட்விட்டரில் சரிபார்க்கப்படாத கணக்கு வைத்திருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு 600 போஸ்ட்களையும், புதிய கணக்கு தொடங்கியவர்கள் நாள் ஒன்றுக்கு 300 ட்விட்களையும் போஸ்ட் செய்யமுடியும். சரிபார்க்கப்பட்ட கணக்குகள் நாள் ஒன்றுக்கு 6,000 போஸ்ட்களை மட்டுமே பார்க்க முடியும் என்ற மஸ்கின் அறிவிப்புக்கான எதிர்ப்பலைகள் அடங்குவதற்குள் ட்வீட் டெக் பயன்பாட்டுக்கு கெடுபிடி விதித்துள்ளார் மஸ்க்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
1 day ago
தொழில்நுட்பம்
2 days ago
தொழில்நுட்பம்
3 days ago
தொழில்நுட்பம்
4 days ago
தொழில்நுட்பம்
8 days ago
தொழில்நுட்பம்
12 days ago
தொழில்நுட்பம்
15 days ago
தொழில்நுட்பம்
17 days ago
தொழில்நுட்பம்
25 days ago
தொழில்நுட்பம்
29 days ago
தொழில்நுட்பம்
30 days ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago
தொழில்நுட்பம்
1 month ago