கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைஅருகே உள்ள கிழக்கேவிளை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் சுதா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.
அதில், எனது சகோதரர் ஜெகதீஷ்-க்கும் பாண்டிவிளை பகுதியைச் சேர்ந்த சரண்யாவுக்கும் கடந்த ஜூன் 21-ல் திருமணம் நடந்தது. சரண்யாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவரது கணவர் தற்கொலை செய்துகொண்டார். இதை அறிந்தே, சரண்யாவை திருமணம் செய்ய ஜெகதீஸ் முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு ஜெகதீஷ், சரண்யா தம்பதியினர் சரண்யாவின் உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றிருந்தனர். ஜூலை 16ல்சரண்யாவின் சித்தப்பா வீட்டில்உணவு அருந்தி விட்டு வந்தனர். அதன் பிறகு ஜெகதீஷ் சுயநினைவின்றி இருப்பதாக, ஜெகதீஷ் உறவினர்களுக்கு சரண்யாபோன் செய்திருந்தார். மருத்துவமனையில் சேர்க்கவில்லை. அதன்பின்னர் அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார் என்றும் சரண்யாதெரிவித்துள்ளார். இந்நிலையில்ஜெகதீஷ் உயிரிழந்து விட்டதாகஅவரது உறவினர்களுக்கு சரண்யாதெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து ஜெகதீஸ் சடலம்,தக்கலை அரசுமருத்துமனைக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. இதுகுறித்து தக்கலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் காயங்கள் அதிகம் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் ஜெகதீஷ்மரணத்தில் மர்மம் உள்ளது. எனவேஜெகதீஸ் மர்ம மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று மனுவில் கூறி இருந்தார். இம்மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, திருமண விருந்திற்கு சென்ற புது மாப்பிள்ளை ஜெகதீஷ் மரணம் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago