பழநி சட்டப்பேரவை தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வாய்ப்பு

By செய்திப்பிரிவு

அதிமுக கூட்டணியில் பாஜக வுக்கு பழநி தொகுதியை ஒதுக் கும் வாய்ப்புள்ளது.

அதிமுக கூட்டணியில் பாமக வுக்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அதைவிட குறைந்த இடங்களே பாஜகவுக்கு ஒதுக்கும் வாய்ப்புள்ளது. இதனால் ஆன்மிக தலங்கள் உள்ள தொகுதிகளில் போட்டியிட பாஜக முடிவு செய்துள்ளது. இதையடுத்து பழநியைக் கேட்டுப் பெற பாஜகவினர் முடிவு செய்துள்ளனர். அக்கட்சியினர் ஏற்கெனவே அறுபடை வீடுகளில் வேல் யாத்திரை நடத்தினர். பழநியில் நடந்த வேல் யாத்திரை நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பழநி தொகுதியை கேட்டுப் பெறுவோம் என்றார்.

பாஜக மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ் பழநியில் களமிறக்கப்படலாம் என எதிர் பார்க்கப்படுகிறது.

அதேநேரம், த.மா.கா. சார்பில் ஏற்கெனவே எம்.பி.யாக இருந்த கார்வேந்தன் தற்போது பாஜகவில் உள்ளார். இவரது பெயரும் பரி சீலனையில் உள்ளது. தொகுதிப் பங்கீடு முடிந்த பிறகு தேர்தல் பணிகளில் இறங்க பாஜகவினர் ஆயத்தமாக உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்