அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், காரைக்கால் மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், திருமானூர் மற்றும் தா.பழூர் ஒன்றிய பகுதிகளில் 20,000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப் பட்டு அறுவடைக்கு தயாரன சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.
மழை நீடித்தால் கீழே சாய்ந்து கிடக்கும் கதிர்களில் உள்ள நெல்மணிகள் அனைத்தும் முளைத்து விடும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். மேலும், விவசாயிகளுக்கு அதிகப்படியான இழப்பு ஏற்படுவதுடன், கால்நடைக ளுக்கு தேவையான வைக்கோல் களும் கிடைக்காது என கவலை தெரிவிக்கின்றனர்.
மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரையிலான மழையளவு(மில்லிமீட்டரில்): செந்துறை 82, ஜெயங்கொண்டம் 68, அரியலூர் 60, திருமானூர் 55.
பெரம்பலூர் மாவட்டத்தில்...
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், நிகழாண்டு பொங்கல் பொருட்கள் விற்பனை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் நெல், கரும்பு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாய்ந்தும், சின்ன வெங்காயம், கடலை போன்ற பயிர்கள் நீரில் மூழ்கி அழுகியும் காணப்படு கின்றன.
மாவட்டத்தில் பெய்த மழை யளவு (மில்லிமீட்டரில்): அகரம் சீகூர், லப்பைக்குடிகாடு தலா 90, செட்டிக்குளம் 55, எறையூர் 53, புதுவேட்டக்குடி, வேப்பந்தட்டை தலா 51, பெரம்பலூர் 48, பாடா லூர் 46, தழுதாழை 36, கிருஷ் ணாபுரம்- 35, வி.களத்தூர் 30.
கரூர் மாவட்டத்தில்...
கரூர் மாவட்டத்தில் பரவலாக லேசான மழை பெய்தது. பகலிலே மிகுந்த குளிராக இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்): பாலவிடுதி 30, மைலம்பட்டி 26, கடவூர் 21, தோகைமலை 16, குளித்தலை, அணைப்பாளையம் தலா 15, பஞ் சப்பட்டி 14.40, கரூர் 13.30, க.பர மத்தி 12.60, மாயனூர் 12, கிருஷ்ண ராயபுரம் 11.60, அரவக் குறிச்சி 10.
திருச்சி மாவட்டத்தில்...
திருச்சி மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக நந்தியாறு தலைப்பில் 60.60 மிமீ மழை பதிவாகியது.
பிற இடங்களில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்): கல்லக்குடி 44.40, புள்ளம்பாடி 44, தென்பரநாடு 36, பொன்னணியாறு அணை 35, மணப்பாறை, மருங்காபுரி தலா 33.80, லால்குடி 33.40, தாத்தையங்கார்பேட்டை 32, பொன்மலை 31.60, தேவிமங்கலம் 31, சமயபுரம் 30.20, திருச்சி நகரம், துவாக்குடி தலா 29, விமான நிலையம் 28.70, முசிறி 23.20, நவலூர் குட்டப்பட்டு 23, திருச்சி ஜங்ஷன் 20.60, வாத்தலை அணைக்கட்டு 19.80, துறையூர் 19, புலிவலம் 17.காரைக்கால் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். பொங்கல் பண்டிகையையொட்டி கடைவீதிக்கு வந்து பொருட்களை வாங்குவதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
கனமழையால் பல்வேறு பகுதி களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப் பட்டுள்ளதால் வேதனையடைந் துள்ள விவசாயிகள், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்காலில் நேற்று காலை 8.30 மணியுடன் 63.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago