கும்பகோணம்: மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவு விவகாரத்தை விளம்பர உத்தி எனும் விதமாக ஆடிட்டர் குருமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் வட்டம், சுவாமிமலை முருகன் கோயிலில் இன்று தரிசனம் செய்த ஆடிட்டர் குருமூர்த்தி (துக்ளக் ஆசிரியர்) செய்தியாளர்களிடம் கூறியது, ''நாடாளுமன்ற தொடர்கள் நடைபெறும் பொழுது ஒருநாள் அல்லது தொடரையே கூட புறக்கணிக்கலாம். 100 வருடங்களுக்குப் பிறகு நடைபெறும். இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்க்கட்சிகள் புறக்கணித்திருப்பது புத்திசாலித்தனமில்லை.
பொருளாதார வளர்ச்சி என்பது உலகம் முழுவதும் அவசியம் என்பதைத் திராவிடர் நாடு எனக் கூறியவர்கள், தற்போது கூறியும், புரிந்து கொண்டும் இருக்கிறார்கள்.
மல்யுத்த வீராங்கனைகள் தங்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசும் முடிவு விவகாரத்தில், டெலிவிஷன் சேனல்களோ, பத்திரிகைகளோ இல்லை என்றால், இது எதுவுமே நடக்காது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவது குறித்து பாஜக - அதிமுகதான் முடிவு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago