சென்னை: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழக பெண்ணுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ஜோயல்பட்டியை சேர்ந்தவர் முத்தமிழ்செல்வி (34). திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இவர்கள் குடும்பத்துடன் சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கத்தில் வசிக்கின்றனர். முத்தமிழ்செல்வி தானும் சாதிக்க வேண்டுமென்று, பல்வேறு மலைகளில் கண்களை மூடியவாறு ஏறியும், இறங்கியும், வில் வித்தையிலும் பல சாதனைகளை புரிந்துள்ளார். எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு பயிற்சி மேற்கொண்டார். ஆனால் பொருளாதார வசதியில்லாமல் தவித்த நிலையில் தமிழக அரசும், தன்னார்வ அமைப்புகளும் நிதியுதவி வழங்கின. கடந்த 23-ம் தேதி எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்தார். தமிழகத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் என்ற பெருமையை பெற்ற முத்தமிழ்செல்வியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.
இந்நிலையில், நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் முத்தமிழ்செல்வி சென்னைக்கு வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உறவினர்கள் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது, “எவரெஸ்ட் சிகரம் ஏற வேண்டுமென மூன்று ஆண்டுகளாக திட்டமிட்டிருந்தேன். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தேன். எனக்கு உதவி செய்த தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,எனது பயிற்சியாளர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தமிழகத்தில் இருக்கும் பெண்களால் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. அனைத்து உயரமான சிகரங்களை ஏற வேண்டும் என்பதுதான் என் அடுத்த இலக்கு” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago