திருப்பூரில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை: மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

By செய்திப்பிரிவு

திருப்பூர்: திருப்பூரில் நேற்று மாலை பலத்த சூறாவளிக் காற்றுடன் மழை பெய்ததில் பல்வேறு இடங்களில் மரங்கள் சாலைகளில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. திருப்பூர்- பல்லடம் சாலையில் இயங்கி வரும் வணிக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகைகள் பலத்த காற்றில் பறந்தன.

காற்றின் வேகத்தில் பல்வேறு இடங்களில் மரங்கள் வேருடன் முறிந்து விழுந்தன. திருப்பூர் டாஸ்மாக் கிடங்கில் இருந்து மதுபானங்களை ஏற்றிவந்த சரக்கு வாகனம், பல்லடம் பழைய பேருந்து நிலையம் மேம்பாலத்தை அடுத்துள்ள பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, சரக்கு வாகனத்தின் மீது மரம் சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் பல்லடம் வழியாக உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கோவைக்கு செல்லும் வாகனங்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டன. சாலையில் கிடந்த மரங்களை அகற்றும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். 2 மணிநேரத்துக்கு பிறகு மரங்களை அகற்றிய பின் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

கரட்டாங்காடு பகுதியில் வணிக வளாக மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் முறிந்து விழுந்ததில், பல இடங்களில் மரங்கள் முறிந்தன. பெரிச்சிபாளையத்தில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மாசாணி அம்மன் கோயிலில் இருந்த அரச மரம் வேரோடு பெயர்ந்து விழுந்தது.

இதில் கோயிலில் உள்ள கான்கிரீட் தளம் மற்றும் காம்பவுண்ட் சுவர் சேதமடைந்தது. மேலும் பெரிச்சிபாளையம் பகுதிக்கு செல்லக் கூடிய மின் கம்பிகள் மீது அந்த மரம் விழுந்ததால், 3 மின் கம்பங்கள் சேதமடைந்தன. மாநகரில் பல்வேறு இடங்களில் மழை பெய்து, மரங்கள் விழுந்து மின்சாரம் தடைபட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்