விநாடி வினா போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் ஆண்டனி என்பவர் புதிய முறை கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். இதற்கு யுனெஸ்கோ நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சின்னத்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜஸ்டின் ஆண்டனி. சமீபத்தில், ஐ. நா. சபையின் சர்வதேச இளைஞர் கவுன்சில் உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். விநாடி வினாவில் தேசிய அறிவு ஒலிம்பியாட் (நேஷனல் நாலட்ஜ் ஒலிம்பியாட்) என்ற புதிய முறையை கண்டுபிடித்துள்ளார்.
இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நடத்தப்படும் விநாடி வினா போட்டிகளில், கேள்வி கேட்பதில் கைதேர்ந்தவரான ஜஸ்டின் ஆண்டனி கூறியதாவது: இரண்டு தேர்வுச்சுற்றுகள் (பிரிமிலினரி) நடத்தப்பட்டு, அதிக புள்ளிகள் பெறும் 5 அணிகள் முக்கிய போட்டியில் (நேஷனல் நாலட்ஜ் ஒலிம்பிக்ஸ்) பங்கெடுக்கும். இதில் மொத்தம் 10 சுற்றுகள் இருக்கும். ஒவ்வொரு சுற்றிலும் 5 அணியில் இருந்து 2 பேர் பங்கெடுப்பர்.
உதாரணமாக அடிப்படை அறிவியல் சுற்றில் ஒரு அணியின் சார்பில் இரண்டு பேர் பங்கெடுப்பர். அடுத்த சுற்று விளையாட்டை பற்றியதெனில், அதே அணிக்காக வேறு இருவர் பங்கெடுப்பர். இவ்வாறு 10 சுற்றிலும் ஒவ்வொரு அணி சார்பிலும் இரண்டு பேர் பங்கெடுப்பர். ஒருவர் அதிகபட்சமாக இரண்டு சுற்றுகளில் மட்டும் பங்கெடுக்க முடியும். இப்படியாக, ஒவ்வொரு அணியிலும் 10 பேர் வீதம், 5 அணியிலும் 50 பேர் பங்கேற்கும் முறையே நேஷனல் நாலட்ஜ் ஒலிம்பிக்ஸ்.
ஐ. நா. சபையின் அங்கமான யுனெஸ்கோவின் கல்வித்துறை அழைப்பின் பேரில் இந்த நேஷனல் நாலட்ஜ் ஒலிம்பியாட்டின் பயன், இதன் முக்கியத்துவம் பற்றி டெல்லி சென்று விளக்கினேன். எனது நீண்டகால சிந்தனைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பயனாக இதை கருதுகிறேன். ஒவ்வொரு சுற்றிலும் திறமையுடைய மாணவ, மாணவிகளுக்கு வாய்ப்பு வழங்குவதன் மூலம் அதிகமானோர் ஒரே நேரத்தில் ஜொலிக்க முடியும். யுனெஸ்கோ அமைப்பு இந்த புதிய முறையை வெகுவாக பாராட்டியுள்ளது என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago