தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு: சென்னை, திருத்தணி உள்ளிட்ட 16 இடங்களில் வெயில் சதம்

By செய்திப்பிரிவு

சென்னை: அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் தமிழகத்தில் நாளையுடன் (மே 29) நிறைவடைகிறது. நேற்றைய நிலவரப்படி 16 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டு கோடைக் காலத்தில் மே 4-ம் தேதி முதல் மே 29-ம் தேதி வரை கத்திரி வெயில் நிலவும். இந்திய வானிலை ஆய்வு மையத்தில் கத்திரி வெயில் தொடர்பாக தரவுகள் ஏதும் இல்லாவிட்டாலும், இந்த காலகட்டத்தில் வெப்பம் அதிகமாக வாட்டுவது வழக்கம். சில ஆண்டுகளில் கத்திரி வெயிலே தெரியாத வகையிலும் இருந்துள்ளது.

ஆனால் இந்த ஆண்டு கடந்த மே 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதல் உள் மாவட்டங்கள் மட்டுமல்லாது கடலோர மாவட்டங்களிலும் கடும் வெயில் சுட்டெரித்தது.

இந்நிலையில் ஒருவழியாக இந்த ஆண்டு கத்திரி வெயில் நாளையுடன் நிறைவடைகிறது. இது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. இருப்பினும் மேலும் சில தினங்களுக்கு கடும் வெப்பம் நீடிக்கும் என்பதால், பள்ளி திறப்பு ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் தலா 107 டிகிரி, வேலூரில் 106 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம் 104 டிகிரி, பாளையங்கோட்டை, புதுச்சேரி, நாகப்பட்டினம், மதுரை, மதுரை விமான நிலையத்தில் தலா 103 டிகிரி, கடலூர், பரங்கிப்பேட்டை, கரூர் பரமத்தியில் தலா 101 டிகிரி, தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால், ஈரோடில் தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்