சிதம்பரம் கோயில் தீட்சிதர் விவகாரம்: விசாரணை கமிஷன் அமைக்க அண்ணாமலை வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

உடுமலை: சிதம்பரம் கோயில் தீட்சிதர் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

தாராபுரத்தை அடுத்த மூலனூர் அருகே அனுப்பபட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, "சிதம்பரம் கோயில் தீட்சிதர் மற்றும் சிறுமியின் பாலிய விவாக திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாகி வருகின்றன. நம் நாட்டைப் பொறுத்தவரை அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டே செயல்பட்டு வருகிறோம். சிதம்பரம் கோயில் குறித்து பல ஆண்டுகளாக பேசி வருகிறோம்.

ஏதோ ஒரு காழ்ப்புணர்ச்சியோடு சிதம்பரம் கோயிலையும், அங்குள்ள தீட்சிதர்கள் குறித்தும் திமுக அரசு தவறான முறையில் அணுகி கொண்டிருக்கிறது. சிதம்பரம் கோயிலைப் பொறுத்தவரை, 1952-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி அரசின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினமும் பிரச்சினை எழுகிறது.

இப்பிரச்சினைக்கு தீர்வுகாண, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு விசாரணை குழு அமைத்து, உண்மைத்தன்மையை கண்டறிய வேண்டும்" என்றார். திருப்பூர் தெற்கு மாவட்ட பாஜக அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்