பண்டிகை, பருவமழையால் கடந்த ஒரு மாதத்தில் சிலிண்டர் விற்பனை 30% உயர்வு: பற்றாக்குறையை தடுக்க நடவடிக்கை

By ப.முரளிதரன்

பண்டிகை மற்றும் பருவமழை காரணமாக சமையல் மற்றும் வர்த்தக எரிவாயு சிலிண்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், தேவையை சமாளிக்க எண்ணெய் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.

தமிழகத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் மூலம் பாரத், இண்டேன், இந்துஸ்தான் ஆகிய பெயர்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. நாடு முழுவதும் 15.34 கோடி காஸ் இணைப்புகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் சுமார் 2 கோடிக்கு மேற்பட்ட சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மழை மற்றும் பண்டிகைக் காலம் ஆகியவற்றால் சிலிண்டரின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ஒன்றரை கோடி சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த விற்பனை கோடைக்காலத்தில் குறைவாகவும், மழைக்காலத்தில் அதிகமாகவும் இருக்கும். தற்போது தீபாவளிப் பண்டிகை மற்றும் அதைத் தொடர்ந்த நாட்களில் ஸ்வீட் கடைகள், ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் இனிப்புகள், கார வகைகள் உள்ளிட்ட பலகாரங்களை தயாரிக்க சிலிண்டர்கள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. அத்துடன், மழைக்காலம் தொடங்கியுள்ளதாலும் சிலிண் டர் தேவை அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சமையல் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், மழைக்காலத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் தடுக்க போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, அனைத்து பாட்லிங் பிளான்ட்டுகளில் கூடுதல் சிலிண்டர்கள் மூலம் எரிவாயு நிரப்பப்பட்டு கிடங்குகளில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம், சிலிண்டர் தட்டுப்பாட்டுப் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முடியும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்