நீலகிரியில் பெய்த தொடர் மழையால் அவலாஞ்சி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மூன்றாண்டுகளுக்கு பின்னர் நீர்: மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக மூன்றாண்டு பின்னர் அவலாஞ்சி நீர்ப்பிடிப்பு பகுதியில் தண்ணீர் வரத்தை கண்டு விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பருவ மழை பொய்த்தது. இந்த ஆண்டு ஜூன் மாத தொடக்கத்திலேயே பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதிகளில் தொடர் மழை பெய்தது.

கடந்த இரு ஆண்டுகளாக மழை பொய்தது. இதனால், மாவட்டத்தின் உள்ள முக்கிய அணைகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து, மின் உற்பத்திக்கு சிக்கல் ஏற்பட்டது.

மின் உற்பத்திக்கு முக்கியமான அப்பர் பவானி, அவலாஞ்சி மற்றும் எமரால்டு அணைகளின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்தது. இதனால், இந்த அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் தண்ணீர் இல்லாமல் மேய்ச்சல் நிலமாக காட்சியளித்தன.

மழை பொய்த்ததால் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் விவசாயப் பணிகள் மேற்கொள்ள முடியாமல் தவித்தனர்.

மேலும், சுற்றுலா பயணிகளும் அவலாஞ்சியின் இயற்கை எழிலை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்து வந்தனர்.

இந்நிலையில், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்ததால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக மூன்றாண்டு பின்னர் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.

இயற்கை எழில்

இதனால், மேய்ச்சல் நிலமாக காட்சியளித்த அவலாஞ்சி நீர்ப்பிடிப்பு பகுதியான போர்த்திஹாடா பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ளது.

மூன்றாண்டுகளுக்கு பின்னர் அப்பகுதியில் தண்ணீரைக் கண்டு விவசாயிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இப்பகுதியின் இயற்கை எழிலைக் காண போர்த்திஹாடா பகுதியை சுற்றுலா பயணிகள் முற்றுகையிட்டு வருகின்றனர்.

அங்கு, மழை காரணமாக பசுமையான தேயிலை தோட்டங்களை சூழ்ந்த கருமேகங்களும், நீல நிறத்தில் தேங்கியுள்ள தண்ணீரும் சுற்றுலா பயணிகளுக்கு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அப்பகுதியை முற்றுகையிட்டு, தங்கள் கண்களாலும், கேமராக்களாலும் காட்சியை படம் பிடித்துச் செல்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்