கோவை: கோவை-கேஎஸ்ஆர் பெங்களூரு இடையிலான உதய் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் வரும் 31-ம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில்நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால், எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12678), வரும் 28, 29, 30-ம் தேதிகளில் சேலம்-கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில்நிலையங்களுக்கு இடையே பகுதியளவு ரத்து செய்யப் படுகிறது. எனவே, இந்த ரயில் எர்ணாகுளம் ரயில்நிலையம் முதல் சேலம் வரை மட்டுமே இயக்கப்படும்.
கேஎஸ்ஆர் பெங்களூரு-எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 12677), வரும் 29, 30, 31-ம் தேதிகளில் கேஎஸ்ஆர் பெங்களூரு-சேலம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு பதில் சேலத்தில் இருந்து புறப்பட்டு, எர்ணாகுளம் சென்றடையும்.
கோவை-கேஎஸ்ஆர் பெங்களூரு இடையிலான உதய் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22666) வரும் 31-ம் தேதி கிருஷ்ணராஜபுரம்-கேஎஸ்ஆர் பெங்களூரு இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் எஸ்எம்விடி பெங்களூரு ரயில்நிலையம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.
» வளர்ச்சித் திட்டங்களை துரிதப்படுத்த 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்
» பும்ராவின் இடத்தை என்னால் எடுத்துக்கொள்ள முடியாது: சொல்கிறார் ஆகாஷ் மத்வால்
கேஎஸ்ஆர் பெங்களூரு-கோவை இடையிலான உதய் எக்ஸ்பிரஸ் (எண்: 22665) வரும் 31-ம் தேதி கேஎஸ்ஆர் பெங்களூரு-கிருஷ்ணராஜபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில்நிலையத்துக்கு பதில் எஸ்எம்விடி பெங்களூரு ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவை வரும்.
லோக்மான்ய திலக்: கோவையில் இருந்து வரும் 31-ம் தேதி காலை 8.05 மணிக்கு லோக்மான்ய திலக் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்: 11014), சேலம்-எலஹன்கா மாற்றுப்பாதையில் திருப்பத்தூர், பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம் வழியாக இயக்கப்படும். இந்த ரயில், தருமபுரி, ஓசூர், பெங்களூரு கண்டோன்மென்ட், கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில்நிலையங்கள் வழியாக செல்லாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago