திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தனியார் மதுபானக் கூடத்தில் மதுபாட்டில் முன்பு சிறுவன் அமர வைக்கப்பட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.
சிறுவர்கள், மாணவர்களை நல்லொழுக்கத்துடன் வாழ்க்கையில் உயரிய நிலையை அடைய வேண்டும் என்பதற்காக மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இவர்களது கல்விக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. மேலும் சிறுவர்கள், மாணவர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், திருவண்ணா மலையில் உள்ள பிரபல தனியார் மதுபானக் கூடத்தில், நாற்காலியில் சிறுவன் ஒருவரை அருகில் அமர வைத்துக் கொண்டு இளைஞர்கள் உள்ளிட்டோர் மது அருந்தும் காட்சி சமூக வலைதளத்தில் நேற்று வைரலானது. சிறுவன் முன்பு மதுபாட்டில் உள்ளது.
சிறுவர்களை மதுக்கடை மற்றும் மதுபானக் கூடங்களுக்கு அழைத்து செல்லக்கூடாது, அனுமதிக்கவும் கூடாது என நீதிமன்றங்கள் வகுத்துள்ள வழிகாட்டி நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. மதுபானக் கூடம் உள்ளே அழைத்து வரப்பட்ட சிறுவனை தடுக்காமல் நிர்வாகமும் அலட்சியமாக செயல்பட்டுள்ளது.
மதுவுக்கு தமிழக இளைஞர்கள் அடிமையாகி வரும் நிலையில், மதுபானக் கூடத்தில் சிறுவன் அமர வைக்கப்பட்டுள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக் கூடத்துக்கு சிறுவர்களை அழைத்து செல்லக்கூடாது. அவர்களை உள்ளேவும் அனுமதிக்கக்கூடாது என சட்டம் கூறுகிறது. ஆனால், மதுபானக் கூடம் உள்ளே சிறுவனை அனுமதித்தது மட்டுமின்றி, அவன் முன்பு மதுபாட்டில் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
எதுவும் அறியாத மழலையின் நெஞ்சில், விஷம் விதைக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வு செய்து தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.
இது தொடர்பாக திருவண்ணாமலை காவல்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்கு கொண்டு சென்று, சம்பந்தப்பட்ட தனியார் மதுபானக் கூடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, உறுதி செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago