தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிதமான மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று (மே 26) முதல் மே 28-ம் தேதி வரை 3 நாள்களுக்கு சில இடங்களில் இடியுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் இன்று முதல் வரும் 28-ம் தேதி வரை இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல, சில இடங்களில் மே 29-ம் தேதி இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் அளவை ஒட்டியிருக்கும்.

தமிழகத்தில் மே 25-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணிக்குப் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கரூர் மாவட்டம் க.பரமத்தியில் 5 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 4 செ.மீ., சேலம் மாவட்டம் வீரகனூரில் 3 செ.மீ., தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 2 செ.மீ., நீலகிரி மாவட்டம் உதகை, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், சேலம், வேலூர் காட்பாடியில் தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, வரும் 28-ம் தேதி வரை இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

14 நகரங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் 14 நகரங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் தலா 105 டிகிரி வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம், வேலூர், மதுரை விமானநிலையத்தில் தலா 104 டிகிரி, திருச்சியில் 103 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், பாளையங்கோட்டை, பரங்கிப்பேட்டை, தஞ்சாவூரில் தலா 102 டிகிரி, நாகப்பட்டினத்தில் 101 டிகிரி, கடலூர், ஈரோடு, திருப்பத்தூரில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.

புதுச்சேரியில் 101 டிகிரி, காரைக் காலில் 100 டிகிரி வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில் வரும் 2 நாட்களுக்கு இதேநிலை தொடரும். இதன்பிறகு, தென்மேற்கில் இருந்து காற்று வீசத் தொடங்கும் என்பதால், வெப்பநிலை குறையும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்