சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையஇயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் மே 24-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை, ஈரோடு மாவட்டம் நம்பியூரில் தலா 3 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், கோவை மாவட்டம் வால்பாறை, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணை, நீலகிரி மாவட்டம் உதகையில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியது.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மே 28-ம் தேதி வரை செல்ல வேண்டாம்.
13 நகரங்களில் வெயில் சதம்: கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் கத்திரி வெயில் காலம் (அக்னி நட்சத்திரம்) தற்போது நிலவுகிறது. தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் கடந்த வாரம் வெப்பநிலை சராசரியை விட 2 முதல் 4 டிகிரி வரை அதிகரித்தது. குறிப்பாக, நடப்பாண்டின் கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை (108 டிகிரி) வேலூரில் கடந்த 15-ம்தேதி பதிவானது. இதற்கு மறுநாள்(மே 16), சென்னை மீனம்பாக்கத்தில் 108 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதன்பிறகு, கோடைமழை காரணமாக, சில நகரங்களில் வெப்பநிலை சற்று குறைந்தது. இருப்பினும், பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவாகி வந்தது.
» தருமபுரி | பைக் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து: கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
» ஸ்ரீவில்லிபுத்தூர் | கோயில் நிலம் குத்தகை விவகாரம் - செயல் அலுவலருக்கு போலீஸ் நோட்டீஸ்
இந்நிலையில், தமிழகத்தில் 13 நகரங்களில் நேற்று வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. அதிகபட்சமாக, சென்னை மீனம்பாக்கத்தில் 105 டிகிரி வெப்பநிலை பதிவானது.
வெப்பநிலை நீடிக்கும்: திருத்தணி, வேலூரில் தலா 104 டிகிரி, திருச்சிராப்பள்ளி, மதுரை நகரத்தில் தலா 102 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், கரூர்பரமத்தி, மதுரை விமான நிலையத்தில் 101 டிகிரி, கடலூர், ஈரோடு, பாளையங்கோட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூரில் தலா 100 டிகிரி பதிவானது. நாகப்பட்டினத்தில் 99 டிகிரி பதிவானது. தமிழகத்தில் வரும் நாட்களில் இதேபோல வெப்பநிலை பதிவாகும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago