5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் அனைத்து அரசுப் பேருந்துகளில் 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு, தொலைதூரம் இயக்கப்படும் விரைவுப் பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது.

இதையடுத்து, நகரப் பேருந்துகளிலும் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, இது நடைமுறைக்கு வந்துள்ளது.

அதன்படி, அனைத்து அரசுப் பேருந்துகளிலும் 5 வயது வரையிலான குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு வெளியூர், விரைவுப் பேருந்துகளில் அரைக் கட்டணம் வசூலிக்கப்படும். நகரப் பேருந்துகளில் 5 வயதுக்கு மேற்பட்டோருக்கு முழு கட்டணம் வசூலிக்கப்படும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

29 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

19 hours ago

மேலும்