சேலம்: ‘புலம் பெயர் தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் நிறுவனங்கள் தொழிலாளர் நலத்துறையில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, ’ என சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு முன்னர், தொடர்புடைய தொழிற்சாலை நிர்வாகங்கள் சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநரிடம் பதிவுச்சான்று பெற்ற பின்னர்தான் பணியமர்த்த வேண்டும். பதிவுச்சான்று இல்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்களை பணி அமர்த்தினால் அதற்கு தடைவிதிப்பதோடு தொடர்புடைய தொழிற்சாலை நிர்வாகங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
மேலும், பதிவுச் சான்று பெறுவதற்கு வெளிமாநில தொழிலாளர்களின் தற்போதைய விவரங்களை https://labour.tn.gov.in/ism என்ற இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்யவேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட விவரத்தினை dcifsalem@gmail.com என்ற மின்னஞ்சலுக்கும், சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகம், 27/2 ஏ 2, காந்தி ரோடு, வருமான வரித்துறை அலுவலகம் அருகில், சேலம்-636007 என்ற முகவரிக்கு அதன் நகல்களையும் அனுப்ப வேண்டும்.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணியின்போதும், பணியில் இல்லாமல் ஓய்வின் போதும் மற்றும் இரவு நேரங்களிலும் உயிருக்கு கேடு ஏதும் ஏற்படாவண்ணம் பாதுகாப்பது தொழிற்சாலை நிர்வாகங்கள் உரிய முறையில் கண்காணிக்க வேண்டும். வேறு ஏதாவது நேர்ந்தால் உடனே அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க வேண்டும்.
» சீர்காழி சட்டைநாதர் கோயில் குடமுழுக்கு விழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
» சென்னை ஐஐடியில் கல்வி மேம்பாட்டுக்காக15 ஆய்வு மையம் திறப்பு
இதுகுறித்து சேலம், ராசிபுரம், நாமக்கல் மற்றும் பரமத்திவேலூர் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் சேலம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் தினகரனை 9597386807, 9445869224 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு தாலுகாவைச் சேர்ந்தவர்கள் மேட்டூர் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநரை 9445869225 என்ற எண்ணிலும், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தினர் ஓசூர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் சந்திரமோகனை 9994847205 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். பதிவுச்சான்று இல்லாமல் வெளிமாநிலத் தொழிலாளர்களை பணி அமர்த்தினால் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago