மதுரை: மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கும், துணை மேயர் நாகராஜனுக்கும் கல்வெட்டில் பெயர் வைப்பது உள்ளிட்ட பல் வேறு மாநகராட்சி நிர்வாக பிரச்சினைகளில் ஏற்பட்ட மோதல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதனால், மாநகராட்சி நிகழ்ச்சி கள், ஆய்வுகளில் ஒன்றாக மீண்டும் கலந்து கொள்ள தொடங்கியுள்ளனர்.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணிக்கும், துணை மேயர் நாகராஜனுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வந்தது. மாநகராட்சி புதிய கட்டிடங்கள் அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழாவில் கல்வெட்டுகளில் தனது பெயர் இடம்பெறாதது குறித்து துணை மேயர் அதிருப்தி தெரிவித்தார்.
புதிதாக வைக்கப்படும் கல்வெட்டில் தனது பெயரை சேர்க்கும்படி மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதினார். அதன் பின்பும், கல்வெட்டுகளில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதுதொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் பேசிய துணை மேயர், தான் புறக்கணிக்கப்படுவதாக பகி ரங்கமாக குற்றம் சாட்டினார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மேயர் தரப்பினர், துணை மேயர் என்பவர் ஒரு கவுன்சிலரை போன்றவரே, அவரது பெயரை அனைத்து மாநகராட்சி கல்வெட்டுகளிலும் இடம்பெறச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினர்.
» சாகுபடி பயிர்களின் பரப்பளவை துல்லியமாக கணக்கிட புதிய செயலி - 35 மாவட்டங்களில் செயல்படுத்த முடிவு
» சங்கரன்கோவில் அருகே பள்ளி வேன் மீது கார் மோதி 5 பேர் மரணம்
இதையடுத்து, மேயர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை துணை மேயர் புறக்கணித்து வந்தார். இருவரும் ஆய்வுகளுக்கு தனித் தனியாகச் சென்றுவந்தனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மேயர் இந்திராணி பங்கேற்ற திருப்பரங்குன்றத்தில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவ லகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தை துணை மேயர் நாகராஜன் புறக்கணித்தார். அதோடு, மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், அந்த மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த
75-வது சுதந்திர தின பவள விழா கல்வெட்டில் தனது பெயரை சேர்க்கக்கோரியும், கல்வெட்டு முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த துணை மேயர் நாகராஜனின் போராட்டம், கூட்டணி கட்சியான திமுகவுக்கு நெருக்கடியை ஏற் படுத்தியது.
மேயர் இந்திராணி துணை மேயர் நாகராஜன் தரப்பினரை தொடர்பு கொண்டு, கல்வெட்டில் அவரது பெயரை வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், போராட்டத்தை கைவிடும்படியும் வலியுறுத் தினார்.
அதன் அடிப்படையில், அவர் போராட்டத்தைக் கைவிட்டார். இதைத்தொடர்ந்து, அந்த கல் வெட்டுக்கு பதிலாக துணை மேயர் பெயர் இடம்பெற்ற புதிய கல்வெட்டு வைக்கப்பட்டது.
அதேபோல், 29-வது வார்டில் வைக்கப்பட்ட மற்றொரு கல் வெட்டிலும் துணைமேயர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மேயர், துணைமேயருக்கு இடையேயான பிரச்சினை முடிவுக்கு வந்தது. மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் இருவரும் பங்கேற்றனர்.
இதுகுறித்து மேயர் தரப் பினரிடம் கேட்டபோது, ‘‘மேயரும், துணைமேயரும் சந்தித்து பேசி சமரசமாகி உள்ளனர். அதன்படி திறப்புவிழா கல்வெட்டுகளில் துணைமேயர் பெயரைச் சேர்க்க அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்தியுள்ளார் என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago