சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதனை நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா இன்று (மே 24) ஓய்வு பெறவுள்ளார்.இதனையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியான எஸ். வைத்தியநாதனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
மே 25-ம் தேதி முதல் நீதிபதி வைத்தியநாதன் தலைமை நீதிபதி பணிகளை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி வைத்தியநாதன்: நீதிபதி வைத்தியநாதன், கடந்த 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயம்புத்தூரில் பிறந்தவர். பள்ளி மற்றும் சட்டப் படிப்பை சென்னையில் முடித்தார். 1986-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கறிஞர் தொழிலை தொடங்கிய அவர், 2013-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
» "செங்கோல் மூலம் தமிழ்க் கலாச்சாரத்தை தேசிய அரங்கில் மீட்டெடுத்த பிரதமருக்கு நன்றி" - அண்ணாமலை
இந்நிலையில், மும்பை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள கங்கா பூர்வாலாவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது. அந்த பரிந்துரை மீது மத்திய அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago