அரசின் பயிற்சித் திட்டங்களை பயன்படுத்தி யுபிஎஸ்சி தேர்வில் வென்று பெருமை சேர்ப்பீர்: முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: அரசின் பயிற்சித் திட்டங்களை பயன்படுத்தி யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று மாநிலத்துக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

இது குறித்து குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நேற்று வெளியான யுபிஎஸ்சி தேர்வில் கொளத்தூரைச் சேர்ந்த ஏ.எஸ்.ஜீ ஜீ தமிழக அளவில் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

கடந்த ஆண்டைவிட அதிகமான அளவில் தமிழகத்தில் இருந்து மாணவர்கள் குடிமைப் பணிக்குத் தேர்வாகியுள்ளது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வு பெறாதவர்கள் துவண்டு போகாமல் தொடர்ந்து முயலுங்கள். அடுத்தடுத்த ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து UPSC தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை உயர வேண்டுமெனத் தமிழக அரசு பல இலவசப் பயிற்சித் திட்டங்களை அறிவித்துள்ளது. அவற்றை அனைவரும் பயன்படுத்தி வெற்றிகண்டு நம் மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பீர்!" என்று அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்