கிருஷ்ணகிரி, நாகை மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்களை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அரசாணை: மாவட்டங்களுக்கான வளர்ச் சிப் பணிகளை துரிதப்படுத்தவும், அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும், வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்களுக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு நியமிக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்டி, கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி, திருவள்ளூர் மாவட்டத்துக்கும், திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கும் நியமிக்கப்படுகின்றனர்.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களைக் கவனித்து வந்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மயிலாடுதுறை மாவட்டத்தை மட்டும் கவனிப்பார். நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நியமிக்கப்படுகிறார்.

ஏற்கெனவே சேலம் - கே.என்.நேரு, தேனி - ஐ.பெரியசாமி, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி - எ.வ.வேலு, தருமபுரி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தென்காசி - கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சசந்திரன், ராமநாதபுரம் - தங்கம் தென்னரசு, காஞ்சிபுரம் - தா.மோ.அன்பரசன், திருநெல்வேலி - ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், கோயம்புத்தூர் - செந்தில்பாலாஜி, பெரம்பலூர் - எஸ்.எஸ்.சிவசங்கர், தஞ்சாவூர் - அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருக்கு பொறுப்பு வழங் கப்பட்டுள்ளது.

பொறுப்பு அமைச்சர்கள், அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, திட்டப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE