சென்னை: தமிழகம் முழுவதும் 25 மாவட்ட வருவாய் அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட்ட அறிவிப்பு:
திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக மு.இந்துமதி, திருநெல்வேலி ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாய ஆணையராக பி.அனிதா, திருநெல்வேலி தாமிரபரணி - கருமேனியாறு- நம்பியாறு ஆற்று இணைப்பு திட்ட நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலராக மா.சுகன்யா, கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலுவலராக உமா மகேஸ்வரி ராமச்சந்திரன், நாகப்பட்டினம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளராக அ.சிவப்பிரியா, மதுரை ஒழுங்கு நடவடிக்கை தீர்ப்பாய ஆணையராக ம.ரா.கண்ணகி. மதுரை, பி. மேட்டுப்பட்டி தேசியகூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநராக கி.நர்மதா, தூத்துக்குடி சிப்காட், எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை நில அடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக ஆ.ம.காமாட்சி கணேசன், நீலகிரி மாவட்ட கூடலூர் ஜென்மம் நிலங்கள் நிலதிட்ட அலுவலராக ப.காந்திமதி, திருநெல்வேலி சிப்காட் சூரிய ஆலை உருவாக்க நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக இரா.ரேவதி, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலராக கு.விமல்ராஜ்.
சென்னை மாநகராட்சி 9-வது மண்டல அலுவலராக சோ.முருகதாஸ், கோயம்புத்தூர் டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளராக சீ.ஜெயச்சந்திரன், செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலராக பி.சுபாநந்தினி, திருவள்ளூர் சிப்காட் நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக இரா.மேனுவேல்ராஜு, திருச்சிராப்பள்ளி நெடுஞ்சாலை நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக மு.வடிவேல்பிரபு, சென்னை மின் ஆளுமை ஆணையரக தொழில்நுட்ப இணை ஆணையராக கா.பிரியா, காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலராக செ.வெங்கடேஷ்.
நெய்வேலி நிலக்கரி கழக நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலராக கோ.சிவ ருத்ரய்யா, சென்னை வன்னியர் வாரிய உறுப்பினர் செயலராக ஆர்.ராஜேந்திரன், சென்னை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சந்தைப்பிரிவு பொதுமேலாளராக ஆர்.சுகுமார், கோவை மாவட்ட வருவாய் அலுவலராக மோ.ஷர்மிளா, சென்னை வெளிவட்டச்சாலை நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலராக சே.ஹா.சேக் முகையதீன், சேலம் மாவட்டம் சென்னை - கன்னியாகுமரி தொழில் முனைய நில எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலராக வே.லதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
» சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட 4 கூடுதல் நீதிபதிகள் பதவியேற்பு
» கிருஷ்ணகிரி, நாகை மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago