சென்னை: மத்திய அரசின் திட்டங்களில் திமுக அரசு ஊழல் செய்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள வஉசி மைதானத்தில், மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.14 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேற்கூரை, அரைமணி நேரம் மழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்துள்ளது.
இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் இந்த பணிகளுக்கான டெண்டர்கோரப்பட்டிருந்தாலும், பெருவாரி யான பணிகள் 2021-ம் ஆண்டுக்குப் பிறகே தொடங்கப்பட்டுள்ளன.
இந்த மைதானத்தை மக்கள்பயன்பாட்டுக்குத் திறந்துவிடுவதற்கு முன்னர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின் முதன்மைச் செயலரான அபூர்வா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வஉசி விளையாட்டு அரங்கத்தின் புதுப்பித்தல் பணியைப் பார்வையிட்ட பின், பணிகள் திருப்திகரமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
» ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற பிறகு 1 கி.மீ. பின்னோக்கி வந்த ரயில்: கேரளாவில் வினோத சம்பவம்
8 மாத பயன்பாட்டுக்குப் பிறகுஇடிந்து விழுந்துள்ளது மேற்கூரை.யாரும் இல்லாத நேரத்தில் இடிந்து விழுந்ததால் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை. ‘ஜல் ஜீவன்’ திட்டம்,‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் என அனைத்து மத்திய அரசின் திட்டங்களிலும் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளது திமுக அரசு.
இந்த மைதானத்தின் புதுப்பித்தல் பணியைச் செய்தவர் மீதும், இதற்குக் காரணமான அதிகாரிகள் மற்றும் துறை அமைச்சர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திருப்பூர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலுக்குள் சமூக விரோதிகள் புகுந்து, சுவாமி சிலைகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தபின், கோயில்கள் மீதான தாக்குதலும், மக்களின்நம்பிக்கைகளைப் புண்படுத்துவதும் தொடர்கிறது. கோயில்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியவில்லை என்றால் இந்து சமய அறநிலையத் துறை எதற்கு? உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக காவல்துறையை வலியுறுத்துகிறேன்.
கோயில்கள் மீதான தாக்குதல் இனியும் தொடர்ந்தால், அதன் எதிர்விளைவுகளுக்கு திமுக அரசே பொறுப்பு. இவ்வாறு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago