ஆவின் குடிநீர் திட்டத்துக்கு விஜயகாந்த் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆவின் குடிநீர் திட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகம் முழுவதும் ஆவின் குடிநீர் பாட்டில்களை விநியோகம் செய்யத் திட்டமிடப்பட்டு, அதற்கான ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டியது அரசின் கடமையாகும். அப்படியிருக்க, குடிநீரை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பது எந்த வகையில் நியாயம்?

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதைப் பற்றியெல்லாம் தமிழக அரசு கவலைப்படவில்லை. முறையாகக் குடிநீர்வரி செலுத்தும் மக்களுக்கு குடிநீரை இலவசமாக வழங்க வேண்டுமே தவிர, அதை விற்பனை செய்யக் கூடாது.

எனவே ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் பாட்டில்களை விற்கும் திட்டத்துக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரியும் பெற்றுக்கொண்டு குடிநீரை வியாபாரம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இத்திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். அதேபோல தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்