உழவர் சந்தைகளில் காய்கறிகளை விற்கும் விவசாயிகள் கந்துவட்டிக்காரர்கள் பிடியில் இருந்து மீள முடியாமல் தவிப்பதாகவும், அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகம் முழுவதும் 143 உழவர் சந்தைகள் இருக்கின்றன. ஒவ்வொரு உழவர் சந்தையிலும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 15 டன் முதல் 70 டன் காய்கறிகள் வரை மாநிலம் முழுவதும் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.
இந்த உழவர் சந்தை விவசாயிகள், கந்து வட்டிக்காரர்களிடம் தினசரி வட்டி அடிப்படையில் வியாபாரம், விவசாயம் மற்றும் குடும்ப செலவுகளுக்காக பணம் வாங்குகின்றனர். அதனால், கந்து வட்டிக்காரர்கள், தினமும் உழவர் சந்தைகளிலேயே முகாமிட்டு, நோட்டும் கையுமாக அலைகின்றனர். மாலையில் காய்கறிகள் விற்று முடிந்ததும், விவசாயிகளிடம் வட்டியை கறாராக அவர்கள் வசூல் செய்துவிட்டு செல்கின்றனர்.
வட்டிக்கு வாங்கிய பணத்தை கொடுத்து முடித்ததும், அடுத்தடுத்த செலவினங்களுக்கு மீண்டும் மீண்டும் கந்து வட்டிக்காரர்களையே விவசாயிகள் நாடுகின்றனர். அதனால், உழவர் சந்தைகளில் கந்து வட்டிக்காரர்களை சார்ந்தே விவசாயிகள் இயங்குவதை காண முடிகிறது. குறிப்பாக, மதுரை உழவர் சந்தைகளில் கந்து வட்டிக்காரர்கள் பிடியில் விவசாயிகள் அதிகஅளவில் சிக்கி தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து உழவர்சந்தை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் 7 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்படுகின்றன. இந்த சந்தைகளில் ஒரு நாளைக்கு ரூ.6 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வியாபாரம் நடக்கிறது. காய்கறிகளை விற்றவுடன் விவசாயிகள் கையில் பணம் கிடைத்து விடுவதால் கந்துவட்டிக்காரர்களுக்கு வசதியாக போய்விடுகிறது. அதனால் விவசாயிகள் கேட்டவுடனே பணம் கொடுக்கின்றனர்.
வங்கிகள் சிறு, குறு விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கடன் கொடுப்பதில்லை. அதனால் விவசாயிகளின் வறுமையை பயன்படுத்தி கந்துவட்டிக்காரர்கள் ஒவ்வொரு உழவர் சந்தையிலும் விவசாயிகளிடம் லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். அதனால், எவ்வளவு வியாபாரம் செய்து லாபம் ஈட்டினாலும் விவசாயிகளால் முன்னேற முடியவில்லை.
இது போலீஸாருக்கு தெரிந்தாலும் கண்டுகொள்வதில்லை. அதனால், கந்துவட்டிக்காரர்கள் பிடியில் இருந்து விவசாயிகளை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago