கொழும்பு அருகே கடலில் மூழ்கிய தூத்துக்குடி பாய்மரத் தோணி: 7 மாலுமிகளை மீட்ட இலங்கை மீனவர்கள்

By எஸ்.முஹம்மது ராஃபி

கொழும்புக்கு தென்கிழக்கில் சர்வதேச கடல் எல்லையில் தத்தளித்துக் கொண்டிருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 7 பாய்மரத் தோணி மாலுமிகளை இலங்கை மீனவர்கள் மீட்டனர்.

வெள்ளிக்கிழமை தூத்துகுடியிலிருந்து இருந்து மாலத்தீவுக்கு சரக்கு ஏற்றி பாய்மரத் தோணி சென்று கொண்டிருந்தது. கொழும்புக்கு தென் கிழக்கே 28 நாட்டிகலில் சர்வதேச கடல் எல்லையில் தோணி சென்று கொண்டிருந்த போது வானிலை மாற்றம் காரணமாக கடலில் மூழ்கியது. அதில் பணியாற்றிய 7 மாலுமிகளும் உயிர்காக்கும் படகில் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

வெள்ளிக்கிழமை மாலை அந்தப் பகுதியில் மீன்பிடிக்க வந்த இலங்கையின் நாட்டுப்படகு ஒன்று 7 மாலுமிகளையும் மீட்டு காலி கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

காலி முகாமில் இலங்கை கடற்படை வீரர்கள் தூத்துக்குடி மாலுமிகளுக்கு முதலுதவி அளித்து உணவு, உடைகள் அளித்தனர். விசாரணைக்கு பின்னர் இந்திய தூதரக அதிகாரிகளிடம் மாலுமிகள் ஒப்படைத்தனர்.

இலங்கை மீனவர்களால் மீட்கப்பட்ட தூத்துக்குடி மாலுமிகள் ஒரிரு நாட்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்