புதுக்கோட்டை/தருமபுரி: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் மீதான வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர். இவர், அதிமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார். இவர், 2016-21 காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சுமார் ரூ.27.22 கோடி மதிப்பிலான சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் 2021 அக்.17-ல் வழக்குப் பதிவு செய்தனர். மறுநாள் விஜயபாஸ்கருக்கு சொந்தமான வீடு, கல் குவாரி, அலுவலகம் உட்பட தமிழகம் முழுவதும் 56 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் சோதனை செய்தனர்.
அப்போது, விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் தொழில், நிலம், வாகனங்கள், நகைகளில் முதலீடு என ரூ.35.79 கோடிக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்ததாக ஊழல் தடுப்பு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், இந்த வழக்கில் விஜயபாஸ்கர் மீது நீதிமன்றத்தில் வழக்குதொடர்வதற்காக சட்டப் பேரவைத் தலைவரிடம் அனுமதியைப் பெற்று, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி இமயவர்மன் தலைமையிலான போலீஸார் நேற்று 210 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகையும், அது தொடர்பாக 800 ஆவணங்களையும் குற்றவியல் நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நேற்று ஆஜராகி தாக்கல் செய்தனர்.
இதேபோன்று, 2016-21 வரை உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். தருமபுரி மாவட்டம் கெரகோட அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் விசாரித்து, ரூ.45 கோடியே 20 லட்சத்து 53 ஆயிரத்து 363 மதிப்பிலான சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்தனர். கே.பி.அன்பழகன், மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி, உறவினர்கள் ரவிசங்கர், சரவணன், சரவணக்குமார், மாணிக்கம், எம்.மல்லிகா, தனபால் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
2022 ஜன.19-ல் தருமபுரி, சேலம், சென்னையில் உள்ள அன்பழகன் வீடு, உறவினர்கள் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களிலும், தெலங்கானா மாநிலத்திலும் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை மற்றும் ஆவணங்களை திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை தருமபுரி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் தாக்கல் செய்தனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்கங்கள் அடங்கிய இந்த குற்றப்பத்திரிக்கையை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுரேஷிடம் தாக்கல் செய்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
28 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago