சென்னை: நகர்ப்புறத் திட்டமிடலை எளிதாக்கும் வகையில், மத்திய அரசின் உயர்நிலைக் குழுவுக்கு உதவுவதற்காக, தமிழக தலைமைச் செயலர் தலைமையில் 18 பேர் அடங்கிய மாநில உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு மத்திய அரசின் பட்ஜெட்டில், ‘‘இந்திய மக்கள் தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.எனவே, நகர்ப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியுள்ளது. இதையொட்டி, நகர்ப்புறக் கொள்கைகளை வகுக்கவும், திட்டமிடவும், செயல்படுத்தவும், நிர்வகிக்கவும் தேவையான பரிந்துரைகள் வழங்க நகர்ப்புற வடிவமைப்பாளர்கள், பொருளாதார வல்லுநர்கள்அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, மத்திய அரசு சார்பில், உலக வங்கியின் முன்னாள் இயக்குநர் கேசவ் வர்மா தலைமையில் குழு அமைக்கப்பட்டது. மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைச் செயலர், தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், மாநில அளவில் தலைமைச் செயலர் தலைமையில், நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலரைக் கொண்ட மாநில உயர்நிலைக் குழுவை அமைக்குமாறு அறிவுறுத்தினார். இதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, தலைமைச் செயலர் தலைமையில் மாநில உயர்நிலை குழுவை அமைத்துள்ளது.
இந்தக் குழுவில், நகராட்சி நிர்வாகம், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் வனம், போக்குவரத்துத் துறைகளின் செயலர்கள், நகராட்சி நிர்வாக இயக்குநர், சிஎம்டிஏ உறுப்பினர்-செயலர், நகர ஊரமைப்பு இயக்குநர் ஆகியோரை உறுப்பினர்களாகவும், வீட்டுவசதித் துறைச் செயலக உறுப்பினர்-செயலர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
» முஸ்லிம் இளைஞருடனான மகளின் திருமணம் நிறுத்தம்: உத்தராகண்ட் பாஜக மூத்த தலைவர் யஷ்பால் தகவல்
மேலும், குழு உறுப்பினர்களாக மாநிலதிட்டக் குழு உறுப்பினர் கே.தீனபந்து (நகராட்சி நிர்வாகம்), தேசிய நகர்ப்புற விவகார வல்லுநர் உமா மகேஸ்வரன் (பருவகால மாற்றம்), திருச்சி என்ஐடி கட்டுமானப் பொறியியல் துறைத் தலைவர் சாம்சன் மேத்யூ (போக்குவரத்து திட்டமிடல்), சென்னை ஐஐடியைச் சேர்ந்த லிஜி பிலிப் (குடிநீர் விநியோக கட்டமைப்பு, சுகாதாரம்), டெல்லி திட்டமிடல் மற்றும் வடிவமைப்புக் கல்வி நிறுவனப் பேராசிரியர் ஸ்ரீதரன் (நகர்ப்புற திட்டமிடல்), அண்ணா பல்கலைக்கழக தொலையுணர்வு ஆராய்ச்சி மைய இயக்குநர் திருமலைவாசன் (தொலையுணர்வு ஆராய்ச்சி), மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் முன்னாள் இயக்குநர் பால் பி.அப்பாசாமி (நகர்ப்புற பொருளாதாரம்), மும்பை பெருநகர மண்டல வளர்ச்சி குழும முன்னாள் தலைமை திட்ட வடிவமைப்பாளர் உமா (நகர்ப்புற திட்டமிடல்), டெல்லி ஹட்கோ முன்னாள் முதுநிலை செயல் இயக்குநர் பி.ஜெயபால் (வீட்டுவசதி) உள்ளிட்டோரும் இடம் பெற்று உள்ளனர்.
இந்தக் குழுவானது, மத்திய அரசுஅமைத்துள்ள உயர்நிலைக் குழுவுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை செய்யும் என்று வீட்டுவசதித் துறைவெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago