இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நிலவை ஆய்வு செய்ய 2008-ல் சந்திராயன்-1 விண்கலத்தை அனுப்பியது. அது நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை உறுதி செய்தது. இதையடுத்து, நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் நோக்கில் சந்திராயன்-2 திட்டத்தை செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக நவீன வசதிகளுடன் சந்திரயான்-2 விண்கலம் உருவாக்கப்பட்டது.
இந்த விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் 2019 ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 2019 செப்டம்பர் மாதம் நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்டபடி லேண்டர் கலன் தரையிறங்காமல் நிலவில் மோதிசெயலிழந்தது. அதேநேரம், விண்கலத்தின் மற்றொரு பகுதியானஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இந்நிலையில் சந்திரயான்-3 திட்டத்தை சுமார் ரூ.615 கோடியில் செயல்படுத்த இஸ்ரோ முடிவு செய்தது.
இந்த விண்கலம் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது: நிலவு பற்றிய ஆய்வுக்கு தென்துருவத்தில் தரையிறங்க வேண்டியது அவசியம். அதைக் கருத்தில் கொண்டு, மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் லேண்டர், ரோவர்கலன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தமுறை விண்கலத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
சந்திரயான்-3 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் வரும் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. சந்திரயான்-2போல அல்லாமல் 42 நாட்கள் பயணத்துக்கு பின்னர் லேண்டர் கலன் ஆகஸ்ட் 22-ம் தேதி விண்ணில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
» முதல்வர் ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் பயணம்: வர்த்தக முதலீட்டு மாநாட்டில் பங்கேற்கிறார்
» ஜல்லிக்கட்டு தீர்ப்பு: தமிழர் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றி!
இந்த திட்டம் வெற்றி பெற்றால் நிலவைபற்றிய பல்வேறு ரகசியகங்கள் வெளியுலகுக்கு தெரியவரும். இதற்கிடையே என்விஎஸ்-2 எனும்வழிகாட்டுதல் செயற்கைக்கோளும் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட் மூலம் மே 29-ம் தேதிவிண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின் றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago