பூதலூர்: திமுகவினருக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் அமைச்சர்கள் தொடங்கிய தூர் வாரும் பணி பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பெ. மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிக்காக ரூ.20 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஆனந்த காவேரி வாய்க்காலில் கடந்த மாதம் 27-ம் தேதி அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் நேரில் அங்கு வந்து பணியினை தொடங்கி வைத்தனர்.
அந்த ஆனந்த காவேரி தூர்வாரும் பணியினை பூதலூரைச் சேர்ந்த திமுகக்காரர் ஒப்பந்தம் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், திமுகவைச் சேர்ந்த இதே வட்டாரத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர், இந்த ஒப்பந்த வேலைக்கு தங்களுக்குக் குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் தொகை தர வேண்டும் என அவரை வேலை செய்ய விடாமல் தடுத்து வந்தனர். இந்த வாய்க்காலில் மொத்தம் 6 கி.மீட்டரில், இதுவரை 2 கிலோ மீட்டர் மட்டுமே தூர் வாரும் பணி முடிந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி இரவு மற்றொரு பிரிவினர், அந்த வாய்க்காலை தூர் வாருவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொக்லின் இயந்திரத்தை சேதப்படுத்தியதுடன், அதிலுள்ள முக்கியமான பாகங்களைத் திருடிச் சென்று விட்டனர். இது குறித்து வெண்ணாறு – வெட்டாறு பகுதி உதவிப் பொறியாளர், சிலரது பெயர்களைச் சுட்டிக்காட்டி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 20-ம் தேதி பூதலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
» முதல் நாளில் ரூ.7 கோடி வரை வசூலித்த விஜய் ஆண்டனியின் ‘பிச்சைக்காரன் 2’
» IPL 2023: CSK vs DC | ருதுராஜ், கான்வே ருத்ர தாண்டவம் - டெல்லிக்கு 224 ரன்கள் இலக்கு
திமுகவினர் தங்களின் தன்னலத்திற்காக இரு பிரிவுகளாகப் பிரிந்து சண்டைப் போட்டுக் கொண்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கான அரசுத் திட்டத்தைச் செயல்படுத்தவிடாமல் தடுத்து பொக்லைன் எந்திரத்தையும் சேதப்படுத்தியுள்ளார்கள். 3 அமைச்சர்கள் அங்கு தூர் வாரும் பணி தொடங்கி வைத்த அன்றிலிருந்து அவர்களுக்குள் கோஷ்டிச் சண்டை தொடர்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள்.
எனவே, தமிழக முதல்வர், திமுகவினர் கமிஷன் கேட்டு கோஷ்டி சண்டை போடுவதைத் தவிர்க்கவும், தூர் வாரும் பணியினை அடுத்த மாதம் தண்ணீர் திறப்புக்குள் முடிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago