பெங்களூரு: கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்கும் விழாவில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்கிறார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் 135 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையாவையும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரையும் காங்கிரஸ் தலைமை நேற்று முன் தினம் அறிவித்தது. இன்று பகல் 12.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள கண்டீரவா ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெறும் பதவி ஏற்பு விழாவில் சித்தராமையாவுக்கு முதல்வராக ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும், அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.
இந்த விழாவில் சோனியா, ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பங்கேற்கிறார். இதற்காக அவர் தற்போது பெங்களூரு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
» கர்நாடகா | சித்தராமையாவுடன் இன்று கேபினட் அமைச்சர்கள் 8 பேர் பதவியேற்பு: காங்கிரஸ் அறிவிப்பு
» ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் | இதற்குத்தான் பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும்: கேஜ்ரிவால் விமர்சனம்
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “கர்நாடக மாநிலத்தின் 39-வது முதல்வராக பதவியேற்கும் சித்தராமையாவை அழைத்து என்னுடைய வாழ்த்தை தெரிவித்தேன். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கர்நாடகாவின் 6.5 கோடி மக்களின் நம்பிக்கையும் நிலைநாட்டப்பட்டுள்ளதாக நம்புகிறேன். டி.கே.சிவகுமார் முன்னேற்றத்தின் பொற்காலத்தை கொண்டு வருவார். பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago