திருவண்ணாமலை: கச்சிகுடா - நாகர்கோவில் இடையே வாராந்திர சிறப்பு ரயில் வரும் 26-ம் தேதி முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தெலங்கானா மாநிலம் கச்சிகுடா பகுதியில் இருந்து திருப்பதி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி வழியாக நாகர்கோவிலுக்கு வரும் 26-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மார்க்கமும் 6 முறை இயக்கப்பட உள்ளது.
கச்சிகுடா ரயில் நிலையத்தில் இருந்து பிரதி வாரம் வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் புறப்பட உள்ளது. குண்டூர்(அதிகாலை 12.45 மணி), ஓங்கோல்(அதிகாலை 3.18 மணி), நெல்லூர் (காலை 5 மணி), ரேணிகுண்டா (காலை 5.40 மணி), காட்பாடி (காலை 9.20 மணி), வேலூர் (காலை 9.43 மணி), திருவண்ணாமலை (காலை 10.43 மணி), விழுப்புரம் (பகல் 12.25 மணி), விருத்தாசலம் (மதியம் 1.15 மணி), ஸ்ரீரங்கம் (பிற்பகல் 2.28 மணி), திருச்சி (பிற்பகல் 3 மணி), திண்டுக்கல் (மாலை 4.40 மணி), மதுரை (மாலை 6 மணி), விருதுநகர் (மாலை 6.45 மணி), சாத்தூர் (இரவு 7.13 மணி), கோவில்பட்டி (இரவு 7.35 மணி), திருநெல்வேலி(இரவு 9.05 மணி) வழியாக நாகர்கோவில் ரயில் நிலையத்தை சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு சென்றடையும்.
இதேபோல், நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து பிரதி வாரம் ஞாயிற்றுகிழமை அதிகாலை 12.30 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் புறப்பட உள்ளது. திருநெல்வேலி (அதிகாலை 2 மணி), கோவில்பட்டி (அதிகாலை 2.53 மணி), சாத்தூர் (அதிகாலை 3.13 மணி), விருதுநகர் (அதிகாலை 3.38 மணி), மதுரை (அதிகாலை 4.15 மணி), திண்டுக்கல் (காலை 5.25 மணி), திருச்சி (காலை 7.40 மணி), ஸ்ரீரங்கம் (காலை 8.23 மணி), விருத்தாசலம் (காலை 9.48 மணி), விழுப்புரம் (காலை 10.25 மணி), திருவண்ணாமலை (காலை 11.38 மணி), வேலூர் (மதியம் 1.20 மணி), காட்பாடி (மதியம் 1.35 மணி), ரேணிகுண்டா (மாலை 4.25 மணி), நெல்லூர் (மாலை 6.40 மணி), ஓங்கோல் (இரவு 8.10 மணி), குண்டூர் (இரவு 10.43 மணி) வழியாக கச்சிகுடா ரயில் நிலையத்தை திங்கள்கிழமை காலை 6.30 மணிக்கு சென்றடையும்.
» சுற்றுலா துறை மூலமாக ரூ.1,500 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்: அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்
» சென்னையில் நடந்த ஐபிஎல் ஆன்லைன் டிக்கெட் விற்பனை விவரங்களை தாக்கல் செய்யக் கோரி வழக்கு
கச்சிகுடா - நாகர்கோவில் இடையே 25 ரயில் நிலையங்களில் வாராந்திர சிறப்பு ரயில் நிறுத்தப்படும். கச்சிகுடா (ரயில் எண் - 07435) ரயில் நிலையத்தில் இருந்து வரும் 26-ம் தேதி முதல் ஜுன் 30-ம் தேதி வரையும், நாகர்கோவில் (ரயில் எண் - 07436) ரயில் நிலையத்தில் இருந்து வரும் 28-ம் தேதி முதல் ஜுலை 2-ம் தேதி வரை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (மே 20-ம் தேதி) முதல் தொடங்குகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 min ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago