திருச்சியில் இருந்து கும்பகோணம் வழியாக அகமதாபாத் செல்லும் சிறப்பு ரயிலில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைப்பு

By சி.எஸ். ஆறுமுகம்

திருச்சி: திருச்சியிலிருந்து கும்பகோணம் வழியாக ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் செல்லும் சிறப்பு ரயிலில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

அகமதாபாத் -திருச்சி இடையே,கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் முதல் பரோடா, சூரத், வாசை -கல்யாண் (மும்பை), புனே, மந்த்ராலயம் ரோடு, ரேணிகுண்டா (திருப்பதி), சென்னை, கும்பகோணம், தஞ்சாவூர் வழியாகச் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு ரயிலில் மொத்த இருக்கைகளை விட 2 மடங்கிற்கும் மேலாகப் பயணிகள் பயன்பாடு இருந்து வருகிறது.

மேலும், தற்போது கோடை விடுமுறை என்பதால் அகமதாபாத் ரயிலில் முன்பதிவு செய்து அதிகமான பயணிகள் காத்திருப்போர் எண்ணிக்கையில் உள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு வரும் ஞாயிற்றுக் கிழமை (21-ம் தேதி) திருச்சியில் இருந்து புறப்படும் வண்டி எண்-09420 திருச்சி-அகமதாபாத் சிறப்புக் கட்டண சிறப்பு ரயிலில் கூடுதலாக ஒரு மூன்றடுக்கு குளிர்சாதனப் பெட்டியும், 2 சாதாரண படுக்கை வசதி பெட்டிகளும் இணைக்கப்படுவதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதனால் குளிர்சாதன பெட்டியில் 64 பயணிகளும், சாதாரண படுக்கை வசதி பெட்டியில் 144 பயணிகளும் கூடுதலாகப் பயணிக்க முடியும். பயணிகள் நலன் கருதி இந்த சிறப்பு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பை தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கம் சார்பில் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளர்கள் சங்கச் செயலாளர் ஏ.கிரி கூறும்போது, ”கடந்த 8 மாதங்களாக பிரதான லயன் பகுதி பயணிகளின் சிறப்பான பயன்பாட்டைப் பெற்றுள்ள திருச்சி-அகமதாபாத் சிறப்பு ரயில் இயக்கம், தற்போது ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு வருகிறது.

இதனால் பயணிகள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இருப்பினும் இந்த ரயிலில் பயணிகள் பயன்பாடு அதிகமாகவே உள்ளது. எனவே இந்த ரயிலை வாரம் 2 முறை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும். இதனால் தொலை தூரப் பயணிகள் 120 நாட்களுக்கு முன்னரே முன்பதிவு மேற்கொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடமுடியும்" எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்