ஸ்ரீ பெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் 21-ம் தேதி ராகுல் காந்தி அஞ்சலி

By செய்திப்பிரிவு

சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் 21-ம் தேதி நடைபெறும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தில் ராகுல்காந்தி பங்கேற்று அஞ்சலி செலுத்துகிறார்.

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-ம் ஆண்டு நினைவுதினம் வரும் 21-ம் தேதி நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் அன்று காலை 8 மணிக்கு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதில் ராகுல் காந்தி பங்கேற்று அஞ்சலி செலுத்த உள்ளார்.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் மூலம் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஏற்படுத்தியிருக்கும் ஆட்சி மாற்றம் 2024 மக்களவைத் தேர்தலில் மத்தியில் அமைந்துள்ள மோடியின் பாசிச, ஜனநாயக விரோத ஆட்சியை அகற்றுவதற்கு அடித்தளமாக அமைந்திருக் கிறது.

பாஜக ஆட்சியை அகற்றும் பேராற்றலும், வல்லமையும் மிக்க தலைவராக ராகுல் காந்தி விளங்கி வருகிறார். எனவே, தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்ற ராஜீவ் காந்தியின் நினைவிடத்துக்கு ராகுல் காந்தி 21-ம் தேதி வரும்போது, காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்