மெர்சல்' என்ற பெயரில் விளம்பரம் செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில். இந்த வழக்கின் தீர்ப்பு அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேலு, யோகிபாபு, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மெர்சல்'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.
இந்நிலையில், ஏ.ஆர்.ஃபில்ம் ஃபேக்டரி என்ற படத் தயாரிப்பு நிறுவனர் ராஜேந்திரன் என்பவர் 'மெர்சலாயிட்டேன்' என்ற தனது படத்தின் பெயரில் இருந்தே 'மெர்சல்' என்ற பெயரை விஜய் படத்துக்கு வைத்துள்ளார். எனவே 'மெர்சல்' படத்தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், எதிர்மனுதாரர் (தேனாண்டாள் பிலிம்ஸ்) சார்பில் சதீஷ் பராசுரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இந்த வழக்கை செப்டம்பர் 22-ம் தேதி அன்று நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார், இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி அக்டோபர் 3-ம் தேதி வரை 'மெர்சல்' என்ற பெயரில் விளம்பரம் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. எதிர் மனுதாரர் தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், '' 'மெர்சல்' மற்றும் 'மெர்சலாயிட்டேன்' என்னும் தலைப்புகள் வேறுவேறு. இந்த பெயரைப் பயன்படுத்தி பெரும் பொருட்செலவில் படத்தை எடுத்துவிட்டோம். படத்தின் பெயரை திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளோம்.
இதனால் எங்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். இதனால் படத்தின் பெயர் மீதான தடையை நீக்கி உத்தரவிட வேண்டும்'' என்று கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், '' 'மெர்சல்', 'மெர்சலாயிட்டேன்' ஆகிய இரு தலைப்புகளும் வேறு வேறு என்று கூறுவதை ஏற்க முடியாது. இந்த தலைப்பை நாங்கள் 2016 முதலே பதிவு செய்து, புதுப்பித்து வருகிறோம்.
நாங்களும் மிகுந்த பொருட்செலவில் படத்தை எடுத்துள்ளோம். இதனால் நாங்களும் கடுமையாக பாதிக்கப்படுவோம்'' என்று வாதிடப்பட்டது.
இந்நிலையில் இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி அனிதா சுமந்த், தீர்ப்பு அக்டோபர் 6-ம் தேதி வெளியிடப்படும் எனவும் அதுவரை ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்றும் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago