சென்னை: திமுக மாணவரணியின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய அளவிலான மாணவர் கூட்டமைப்பு சார்பில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தும் முடிவுக்கு ஆதரவாக திமுக மாணவர் அணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
திமுக மாணவரணி மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமையில் அணித்தலைவர் ஆர்.ராஜீவ்காந்தி, இணை செயலாளர்கள் பூவை சி.ஜெரால்டு, எஸ்.மோகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை வெகுசிறப்பாக ஓராண்டு முழுவதும் பொது மக்களுக்குப் பயனுள்ளதாகக் கொண்டாடும் வகையில், எளியோருக்குப் பசியாற்றும் முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கருத்தரங்கம், பட்டிமன்றம் என சிறப்பாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு ஜூன் 3-ம் தேதி அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம், கிங்ஸ் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், ரூ.230 கோடியில் கட்டப்பட்ட, பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறந்து வைத்தல் மற்றும் நூற்றாண்டு தொடக்க விழா, ஜூன் 15-ம் தேதி தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், திருவாரூரில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் கோட்டம்’ அருங்காட்சியகம் திறப்பு விழா நடைபெறுகிறது. இந்த முப்பெரும் விழாக்களில் அணி நிர்வாகிகள் பங்கேற்று சிறப்பிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
» நாட்டின் மொத்த விலை பணவீக்கம் ஏப்ரலில் -0.92 சதவீதமாக சரிவு
» போலி ஆவணங்கள் மூலம் பெற்ற 20,000 மொபைல் எண்களை முடக்கியது ஹரியாணா போலீஸ்
மேலும், மாவட்டம்தோறும் பள்ளி மற்றும் கல்லூரி அளவிலான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்தியல் பிரச்சாரம்: பாஜக அரசின் கொள்கையை எதிர்க்கும் நாடு முழுவதும் உள்ள ஜனநாயக, முற்போக்கு, மதச்சார்பற்ற சிந்தனை கொண்ட மாணவர்கள் அமைப்புகள், மாணவர்களிடம் கருத்தியல் பிரச்சாரம் செய்ய, களத்தில் போராட தேசிய அளவில் மாணவர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
சமூகநீதி, இடஒதுக்கீடு: இந்த கூட்டமைப்பு சார்பில் சமூகநீதி, இடஒதுக்கீடு, மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்குதல் இவற்றை பாதிக்கும் மத்தியஅரசின் கல்வித் திட்டங்களை கண்டிப்பது, தேசியகல்விக் கொள்கைக்கு மாற்றான வரைவு அறிக்கைஒன்றை அளித்தல் உள்ளிட்டவைகுறித்தும் விவாதித்து மாணவரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சமூகநீதி, கல்வி, மாநில உரிமைகள், கூட்டாட்சி கட்டமைப்பை கட்டிக்காக்கும் வகையில், முற்போக்கு சக்திகளை ஒன்றிணைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலுடன், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை ஆட்சிப்பொறுப்பில் இருந்து அகற்றும்வரை முன்கள வீரர்களாக மாணவர் அணி செயல்படுவது என்பனஉள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago