சென்னை: பெங்களூரில் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ள கர்நாடக மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "கர்நாடக மாநில பொதுத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்து வெற்றி பெற்றதையடுத்து, கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையா 20.5.2023 அன்று பதவியேற்கவுள்ளதால், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சித்தராமையா ஆகியோர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று (18.5.2023) தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு 20.5.2023 அன்று பெங்களூரில் நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கர்நாடகாவின் அடுத்த முதல்வராக சித்தராமையா பதவி ஏற்பார் என்றும், டிகே சிவகுமார் துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராக தொடர்வார் என்றும் காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. | விரிவாக வாசிக்க > கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவகுமார் - காங்கிரஸ் அறிவிப்பு
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago