திமுக அரசு மீது புகார்: பேரணியாக சென்று ஆளுநரிடம் அளிக்கிறார் இபிஎஸ் 

By செய்திப்பிரிவு

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வரும் 22-ம் தேதி பேரணியாக சென்று ஆளுநரிடம் திமுக அரசு மீது புகார் அளிக்க உள்ளார்.

இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்,"திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள்முதல் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக, மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

திமுக ஆட்சியின் பல்வேறு முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 22-ம் தேதி காலை 10.25 மணிக்கு, சென்னை, சின்னமலை, தாலுகா அலுவலகம் சாலை, இயேசு கிறிஸ்து சபை அருகில் இருந்து, பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமாகிய எடப்பாடி பழனிசாமி தலைமையில் பேரணியாகப் புறப்பட்டு, ஆளுநர் மாளிகை சென்றடைந்து, முக்கிய கழக நிர்வாகிகள் ஆளுநரை நேரில் சந்தித்து மனு அளிக்க உள்ளார்கள்." என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்