சென்னை: தூத்துக்குடி முன்னாள் எம்பி ஜெயதுரை கல்லூரிக்கு வராமல் யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பை முடித்ததாக புகார் எழுந்ததால் அவரிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது. அதேநேரத்தில் உயர் அதிகாரியின் தனிப்பட்ட விரோதமே காரணம் என பேராசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் இந்திய மருத்துவ முறை படிப்புகளான சித்தா, யுனானி, ஓமியோபதி போன்ற மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரம்,யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
சென்னை யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரியில் இளங்கலை பட்டம் படித்த தூத்துக்குடி முன்னாள் எம்பி ஜெயதுரை முறையாக கல்லுாரிக்கு வராமலேயே தேர்வு எழுதி அனைத்து பாடங்களையும் தேர்ச்சி பெற்றதாக புகார் எழுந்தது. அதனால், அவரதுபட்டத்தை தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரியில் ஜெயதுரையிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களிடம் கேட்டபோது, “தூத்துக்குடி முன்னாள் எம்பி ஜெயதுரை மீது சொல்லப்படும் குற்றச்சாட்டு மிகவும் தவறானது. அவர் கல்லூரிக்கு வந்துள்ளார். பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
இது அவருடன் படித்த அனைத்து மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் தெரியும். உயர் அதிகாரி ஒருவரின் தனிப்பட்ட விரோதத்தின் காரணமாக இதுநடக்கிறது” என்றனர். யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 secs ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago