கள்ளச்சாராயத்தை ஒழிக்க போர்க்கால நடவடிக்கை - கட்சித் தலைவர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:

பாமக தலைவர் அன்புமணி: தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டுவிட்டதால்தான், சிலர் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனாலை திருடி விற்பனை செய்ததாக காவல் துறை கூறுவது உண்மைக்குப் புறம்பானது. தமிழகம் முழுவதும் பரவியுள்ள கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழக அரசும், காவல் துறையும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் எம்.பி.: தமிழக அரசு மதுபானங்களின் விலையை ஏற்றியதால், கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து, 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது மிகுந்த வேதனையைஅளிக்கிறது. மதுக்கடைகளை மூடுவதுடன், கள்ளச்சாராயத்தையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதேநிலை நீடித்தால், ஐஜேகே போராட்டங்களை மேற்கொள்ளும்.

மக்கள் நீதி மய்யம்: கள்ளச்சாராயம் தயாரிப்போர், விற்பனை செய்வோர், விற்பனைக்குத் துணைபுரிவோர் உள்ளிட்ட அனைவர் மீதும் தமிழக காவல் துறை தொடர்ந்து நடவடிக்கை எடுத்து, கள்ளச்சாராயம் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE