கள்ளச்சாராயம் விவகாரத்தில் நிவாரணம், திமுக அரசின் தவறை மறைக்கும் செயல் - பிரேமலதா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பந்தலடி கீழ் புறத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேமுதிக கொள்கை விளக்க பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: மரக்காணம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கியது, திமுக அரசின் தவறை மறைக்கும் செயல். இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

கடந்த ஆட்சியில் குடிப் பழக்கத்தால் கணவரை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக கனிமொழி கூறியிருந்தார். ஆனால் திமுக ஆட்சியில்தான் தமிழகத்தில் இளம் வயதிலேயே கணவரை இழந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சூதாட்ட தடை சட்டம் கொண்டு வந்ததுபோல், மது, கஞ்சா உள்ளிட்டவற்றை உடனடியாக ஒழிக்க வேண்டியது திமுக அரசின் வேலை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்