கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவருக்கும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு - பழனிசாமி, அண்ணாமலை கண்டனம்

By செய்திப்பிரிவு

சென்னை: கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட அமாவாசை என்பவருக்கும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கள்ளச்சாராயம் விற்றதாக அமாவாசை என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார். அவரும் கள்ளச்சாராயம் குடித்திருந்ததால், செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அரசு ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த விவரங்களைப் பகிர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி: செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு காரணமானவர் என்று இந்த அரசு வழக்கு பதிவு செய்துள்ள அமாவாசை என்பவர் திமுக ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன் என்பவருடைய தம்பி ஆவார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அமாவாசை தானும் அந்த மதுபானத்தை அருந்தியதாக மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக் கொண்டார். இந்நிலையில் போலி மதுபான வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட அமாவாசைக்கு இந்த அரசு, போலி மதுபானத்தால் பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும் ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கி இருக்கிறது. இதுதான் நவீன திராவிட மாடல் ஆட்சி போலும். சில நாட்களுக்கு முன்னாள் ஒருவர் தன்னை மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் கேப்டன் என்று பொய் சொல்லி முதல்வரை சந்தித்து பரிசு பெற்று செல்கிறார்.

தற்போது என்னவென்றால் கள்ளச்சாராயம் காய்ச்சி உயிரைப் பறித்தவருக்கு அவரின் செயலை பாராட்டி பரிசு கொடுப்பதுபோல் நிவாரணம் கொடுக்கப்படுகிறது. இந்தியாவிலேயே, ஏன் இந்த உலகத்திலேயே குற்றவாளிக்கு நிவாரணம் வழங்கும் ஒரே அரசு தற்போது ஆட்சியிலுள்ள திமுக அரசு தான்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: கைதிலிருந்து தப்பிப்பதற்காக தானும் கள்ளச்சாராயம் உட்கொண்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நாடகமாடியுள்ளார் அமாவாசை. அவருக்கும் ரூ.50,000 இழப்பீடு வழங்கியுள்ளது இந்த திமுக அரசு. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்