இலங்கையில் அகதிகளாக தஞ்ச மடையும் போராட்டத்தை வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி நடத்த உள்ள தாக தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இலங்கை கடற்படை யால் சிறைப்பிடிக்கப்படுவதுடன், படகுகள், வலைகள் உள்ளிட்ட மீனவர்களின் வாழ்வாதார பொருட் கள் இலங்கை படையினரால் சேதப்படுத்தப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
கடந்த 2 மாதங்களில் இலங்கை கடற்படையினர் 55 விசைப்படகுகளை சிறைப்படுத்தி, 3 விசைப்படகுகளை நடுக்கடலில் மூழ்கடித்து, 250-க்கும் மேற்பட்ட மீனவர்களை சிறைபிடித்துள்ளனர். பின்னர் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எழுதிய கடிதங்களைத் தொடர்ந்து தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்தது. சமீபத்தில் பிடிபட்ட தமிழக மீனவர்கள் 43 பேர் அனுராதபுரம், யாழ்ப்பாணம் சிறைகளில் தற்போது அடைக்கப்பட்டுள்ளனர்.
கண்டன ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் இலங்கை கடற் படையினரால் சமீபத்தில் சிறைப் பிடிக்கப்பட்ட 43 மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும், பறி முதல் செய்யப்பட்ட 55 விசைப் படகுகளை மீண்டும் தமிழக மீன வர்களிடம் ஒப்படைக்கக் கோரியும், கச்சத்தீவு பகுதியில் இருநாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டக் கோரியும் ராமநாதபுரம் அரசு பேருந்து பணிமனை அருகே திங்கள்கிழமை தமிழக-புதுவை மீனவர் கூட்டமைப்புத் தலைவர் போஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மீனவர் பிரதிநிதி தேவதாஸ் தலைமையில் பேரணியாகப் புறப்பட்ட 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்கள் விசைப்படகு உரிமை ஆவணங்களை ஒப்படைத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மீனவ மக்கள் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் இருதயமேரி கூறியதாவது: ராமேசுவரம் மீனவர்கள் கடலுக்கு சென்ற நாட்க ளைவிட போராட்டங்களும், ஆர்ப் பாட்டங்களும், மறியல்களும் நடத்தி யதே அதிகம். இலங்கை அதிபர் ராஜ பக்ச உத்தரவிட்ட பிறகும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக தங்கச்சி மடம் மீனவர்கள் 5 பேர் கொழும்பு சிறையில் வாடி வருகின்றனர்.
அகதிகளாக தஞ்சமடையும் போராட்டம்
பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ் தானிடமிருந்து குஜராத் மீனவர் களின் விசைப்படகுகளை மீட்டுக் கொடுத்தது போல, இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ள 55 விசைப்படகுகளையும், 43 மீனவர் களையும் விடுவிக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
வரும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் எங்களது கோரிக்கைகள் நிறை வேற்றப்படவில்லையெனில் அடுத்தகட்டமாக ஆகஸ்ட் 2-ம் தேதி எங்களது விசைப்படகுகளில் வெள்ளைக்கொடி கட்டி கச்சத்தீவில் அகதிகளாக தஞ்சமடையும் போராட் டத்தை நடத்துவோம் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago