அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான விண்ணப்பம், தேர்வு கட்டணம் 100 சதவீதம் அதிகரிப்பு: பயிற்சி கட்டணம் ரூ.3 ஆயிரமாக உயர்வு

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கான பயிற்சிக் கட்டணத்தை 50 சதவீதமும், விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணங்களை 100 சதவீதமும் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அரசு கணினி சான்றிதழ் தேர்வு (Certificate course in Computer on Office Automation) ஆண்டுக்கு 2 முறை (பிப்ரவரி, ஆகஸ்ட்) நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்வின்போதும் 3 மடங்காக அதிகரித்து வருகிறது. இதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப தேர்வுக் கட்டணத்தை 100 சதவீதமும், பயிற்சிக் கட்டணத்தை 50 சதவீதமும் உயர்த்தி ஆணையிடுமாறு தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார். ஆணையரின் கருத்துருவை அரசு கவனமுடன் ஆய்வுசெய்து, விண்ணப்பம் மற்றும் தேர்வுக் கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தியும் பயிற்சிக் கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தியும் ஆணையிடுகிறது.

அதன்படி, விண்ணப்பக் கட்டணம் ரூ.15-லிருந்து ரூ.30 ஆகவும், தேர்வுக் கட்டணம் ரூ.500-லிருந்து ரூ.1,000 ஆகவும், பயிற்சிக் கட்டணம் (120 மணி நேரம்) ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாகவும் உயர்த்தி நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், பயிற்சி காலம் தொடர்பாக பின்வரும் திருத்தம் செய்யப்படுகிறது.

பயிற்சி மையம் அல்லது பாலிடெக்னிக்குகளில் இத்தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்கள் குறைந்தபட்சம் 120 மணி நேரம் கணினி பயிற்சி பெற வேண்டும். தனித்தேர்வர்கள் தாங்கள் 120 மணி நேரம் கணினி பயிற்சி பெற்றதற்கு சுய உறுதிமொழி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசில் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் சேர அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இத்தேர்ச்சி இல்லாமல் குருப்-4 தேர்வு மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டாலும் தகுதிகாண் பருவத்துக்குள் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, சுற்றுலாத் துறையில் மாவட்ட சுற்றுலா அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கும் அரசு கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி கட்டாயம் ஆகும். இந்த கல்வித்தகுதி இருந்தால் மட்டுமே இதற்கான போட்டித் தேர்வுக்கே விண்ணப்பிக்க முடியும். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி தேர்வுக்கும் கணினி சான்றிதழ் தேர்வு தேர்ச்சி விரும்பத்தக்க தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்