சென்னை: பாரம்பரியமிக்க சென்னை உயர் நீதிமன்ற கட்டிடத்தில் ஏற்கெனவே 48 நீதிமன்ற விசாரணை அறைகள் உள்ளன. இந்த எண்ணிக்கையை 57 ஆக உயர்த்தவும், அதில் 5 நீதிமன்ற அறைகளை பிரத்யேகமாக காணொலி காட்சி விசாரணைக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, உயர் நீதிமன்ற பிரதான கட்டிடத்தில் இருந்த நீதிமன்ற அறைகளில் மாற்றம் செய்யப்பட்டு புதிதாக 6 நீதிமன்ற அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்ற அறைகளை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், சி.வி.கார்த்திகேயன், பி.டி.ஆதிகேசவலு, சி.சரவணன், ஜி.சந்திரசேகரன், முகமது ஷபீக், சுந்தர் மோகன், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆர்.நீலகண்டன், அகில இந்திய பார் கவுன்சில் துணைத் தலைவர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago