சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவ, மாணவிகளுக்காக ரூ.82.02 கோடியில் கட்டப்பட்டுள்ள விடுதிகள், பள்ளிக் கட்டிடங்கள், ஏகலைவா உண்டு உறைவிடப் பள்ளிக் கட்டிடங்களை முதல்வர்மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.
தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைசார்பில் ரூ.42.46 கோடி மதிப்பில்ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான 21 விடுதிகள், ரூ.16.59 கோடியில் 9 பள்ளிக் கட்டடங்கள், ரூ.22.98 கோடியில் 4 ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார். இதில்,அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பி.கே.சேகர்பாபு, என்.கயல்விழி செல்வராஜ், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத் தலைவர் உ.மதிவாணன், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியத் துணைத் தலைவர் செ.கனிமொழி பத்மநாபன், தலைமைச் செயலர் வெ.இறையன்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச் செயலாளர் ஜி. லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் த.ஆனந்த், தாட்கோ மேலாண்மை இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி, பழங்குடியினர் நல இயக்குநர் எஸ்.அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரூர் மாவட்டம் கடவூர், மதுரை ரேஸ்கோர்ஸ், திருச்சி மாவட்டம் துறையூர், தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, சிவகங்கை மாவட்டம் கொம்புக்காரனேந்தல், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர், நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ரூ.18.89கோடியில் பள்ளி மாணவர்களுக்கான 9 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் குலவணிகர்புரம், தேனி மாவட்டம் எரசக்கநாயக்கனூர், கோட்டூர், திருவாரூர் மாவட்டம் பேரளம் மற்றும் காஞ்சிபுரத்தில் ரூ.6.80 கோடியில் 5 விடுதிகள், கரூர் மாவட்டம் தாந்தோணிமலை, தஞ்சாவூர்மாவட்டம் ஒரத்தநாடு, புதுக்கோட்டை மாவட்டம் மருதன்கோன்விடுதி, மதுரை மாவட்டம் சொக்கிகுளம், சென்னை ராயபுரம் மற்றும் காஞ்சிபுரத்தில் ரூ.16.76 கோடியில் கல்லூரி மாணவர்களுக்கான 7 விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் ரெட்டமங்கலம், செங்கல்பட்டு மாவட்டம்மீனம்பாக்கம், கடலூர் மாவட்டம் சேப்பாக்கம், மேலவன்னியூர் மற்றும் சிதம்பரம் நந்தனார் பள்ளி,சேலம் மாவட்டம் வெள்ளிகவுண்டனூர், புதுக்கோட்டை மாவட்டம் முள்ளன்குறிச்சி, ராணிப்பேட்டை மாவட்டம் எலத்தூர், சேலம் மாவட்டம் தாத்தியாம்பட்டியில் உள்ள 9 ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் ரூ.16.59 கோடியில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், திருப்பத்தூர் மாவட்டம் கீழுர், திருவண்ணாமலை மாவட்டம் புளியம்பட்டி, நீலகிரி மாவட்டம் மு.பாலாடா, நாமக்கல் மாவட்டம் செங்கரையில் ரூ.22.98 கோடியில் ஏகலைவா மாதிரி உண்டுஉறைவிடப் பள்ளிகள் கட்டப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர், தாட்கோ மேலாளர்கள் மற்றும் செயற் பொறியாளர்களின் அலுவலகப் பயன்பாட்டுக்காக ரூ.2.04 கோடி மதிப்பில் வாங்கப்பட்டுள்ள 23 வாகனங்களின் செயல்பாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். தொடர்ந்து, வீடற்ற 500 தூய்மைப் பணியாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு, ரூ.55 கோடியில் வீடுகளை வாங்குவதற்கான மானிய ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago