தலைவர்கள் வாழ்ந்த இல்லங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று பொதுப்பணித் துறை அலுவலர்களுக்கு, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு அறிவுறுத்தினார்.
தமிழக அரசின் செய்தித் துறையின் கீழ் உள்ள, சென்னை காந்தி மண்டபம் வளாகத்தில் அமைந்துள்ள ராஜாஜி நினைவிடம், காந்தி அருங்காட்சியகம் மற்றும் சிறையில் வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்கு பொலிவூட்டப்பட்டுள்ளதையும், மார்பளவுச் சிலையையும் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து, சுதந்திரப் போராட்ட வீரர்கள் அரங்கம், தமிழ்மொழித் தியாகிகள் அரங்கம், எம்.பக்தவத்சலம், இரட்டைமலை சீனிவாசன், காமராஜர் ஆகியோரது நினைவிடங்களை ஆய்வு செய்தார்.
பின்னர், ரூ.2.48 கோடி மதிப்பில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அயோத்திதாச பண்டிதர் நினைவு மண்டப கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார். காந்தி மண்டப வளாகத்தில், அதிக அளவில் நமது மண்ணிற்கேற்ற நாட்டு மரக் கன்றுகளை நடவு செய்யுமாறு அறிவுத்தினார்.
பின்னர், காமராஜர் நினைவு இல்லம், காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் மணிமண்டபம், திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லம், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் ஆகியவற்றைப் பார்வையிட்டு, அரங்கங்கள் மற்றும் மணிமண்டபங்களை மக்கள் அதிக அளவில் பார்வையிடும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள், இதுபோன்ற அரங்கங்கள் மற்றும் மணிமண்டபங்களைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யவும் செய்தித் துறை அலுவலர்களைக் கேட்டுக்கொண்டார்.
அதேநேரத்தில், தலைவர்கள் வாழ்ந்த இல்லங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் இரா.செல்வராஜ், கூடுதல் இயக்குநர் (செய்தி) சிவ.சு.சரவணன், இணை இயக்குநர் (நினைவகங்கள்) கு.தமிழ்செல்வராஜன், முதன்மை தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) கே.பி.சத்தியமூர்த்தி, தலைமைப் பொறியாளர் (சென்னை மண்டலம்) கே.ஆயத்தரசு ராஜசேகரன், செயற் பொறியாளர் இ.ஜெயகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
16 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago