சென்னை: மீட்டர் கட்டணத்தை அறிவிக்கும் வரை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம் கூறியதாவது: கடந்த 2013-ம் ஆண்டில் 1.8 கி.மீ. தொலைவுக்கு ரூ.25, அடுத்த ஒவ்வொரு கி.மீட்டருக்கும் தலா ரூ.12, காத்திருப்பு கட்டணம் 5 நிமிடத்துக்கு ரூ.3.50, இரவு நேரத்தில் இந்த கட்டணத்தை இரட்டிப்பாக வசூலிக்க அனுமதித்து போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்தது.
ஆனால், அரசு மீட்டர் வழங்காததால் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படவில்லை. மேலும் அந்தகாலகட்டத்தில் லிட்டர் பெட்ரோல் ரூ.60, டீசல் ரூ.45 என்ற அளவில் இருந்தது. தற்போது பெட்ரோல் விலை ரூ.100-ஐ கடந்து விற்கப்படுகிறது.
இதேபோல் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு ஆட்டோ மீட்டர்கட்டணத்தை உயர்த்த வேண்டும் எனக் கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து மே மாதம்நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில், 1.5 கிமீ-க்கு ரூ.50 மற்றும் அடுத்தடுத்த ஒவ்வொரு கிமீ-க்கும் ரூ.25 கட்டணம் வசூலிக்க வேண்டும் என தெரிவித்தோம். இதுவரை கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதுதொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். கடந்த வாரம் கூட உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
இதற்கிடையே கார்ப்பரேட் நிறுவனங்களின் பைக் டாக்சிகளும் எங்களது வாழ்வாதாரத்தைப் பாதித்து வருகின்றன. எங்களது பிரச்சினைகள் குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
எனவே, மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், ஆட்டோ முன்பதிவுக்கான செயலியை அரசு வடிவமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 26-ம் தேதிமுதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம். சென்னை, எழிலகத்தில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நடைபெறும் காத்திருப்பு போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago